Announcement

Collapse
No announcement yet.

துளசியின் மகிமை !!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • துளசியின் மகிமை !!

    துளசியின் மகிமை !! பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ள ஒரு சில குறிப்புகள்...

    Click image for larger version

Name:	Thulasi.jpg
Views:	1
Size:	101.1 KB
ID:	35336

    ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான மற்றும் எல்லா வகையிலும் புனிதமான, துளசி தேவியை சாதாரணமாக தொடுவதாலும், பார்ப்பதாலும், உணரப்படுவதாலும், துளசியின் மண்ணை வணங்குவதாலும், துளசியைப் பற்றி கேட்டபதாலும், வளர்ப்பதாலும், நம் பாவங்கள் நீங்கப் பெற்று புனிதமடைவோம். துளசியை வணங்குவதால் விளையும் பயன்கள் துளசி அனைத்து பக்தி தொண்டுகளின் சாரம்.

    துளசி இலை பூ, வேர்கள், கிளைகள், நிழல் எல்லாம் ஆன்மீகமானவை. பக்தியுடன் துளசியின் இலையை கிருஷ்ணருக்கு அளிப்பவர் அவர் அருகிலேயே வாழ்வர். துளசியின் மண்ணை எடுத்து உடலில் பூசிக்கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குபவர், ஒவ்வொரு நாளும் நூறு நாள் பூஜை செய்த பயனை அடைவர். துளசி மஞ்சரியை கிருஷ்ணருக்கு அளிப்பவர் மற்ற எல்லா புஷ்பங்களையும் அளித்த பலனை பெறுவர். ஒருவர் துளசியை பார்த்தாலோ, அல்லது அது இருக்கும் வீட்டிற்கோ, தோட்டத்திற்கோ சென்றால் அவர் ஒரு பிராமணனை கொன்ற பாவத்தில் இருந்தும் கூட, விடுதலை பெறுகிறான். துளசி உள்ள காடுகள் வீடுகள் ஆகிய இடங்களில் கிருஷ்ணர் ஆனந்தமாக வசிக்கிறார்.

    துளசி உள்ள வீடுகள் எந்த கேடான காலத்திலும் வீழ்ச்சி அடையாது. அதுவும் அல்லாமல் எல்லா புனித ஸ்தலங்களிலும் புனிதமானது. துளசியின் வாசனை முகர்ந்து பார்க்கும் அனைவரையும் தூய்மையாக்கும். துளசி உள்ள இடங்களில் கிருஷ்ணரும், மற்ற எல்லா தெய்வங்களும் வசிப்பார்கள். துளசி இல்லாமல் கிருஷ்ணர் பூவோ, உணவோ அல்லது சந்தனத் தைலமோ ஏற்பதில்லை. துளசியைக் கொண்டு கிருஷ்ணரை தினமும் வணங்கும் பக்தர்கள், எல்லா ஸ்தலங்களையும், தானங்களையும், மற்றும் தியாகங்களையும் செய்தவர் ஆகிறார். சொல்லப் போனால் அவருக்கு செய்ய வேண்டிய வேறு கடமைகள் இல்லை. அத்தோடு, அவர் எல்லா இலக்கியம் மற்றும் புராணங்களையும் படித்தவர் ஆகிறார். கிருஷ்ணருக்கு படைக்கப்பட்ட துளசியை தலையிலோ, வாயிலோ போட்டுக் கொண்டவர் கிருஷ்ணரின் திருநாட்டிற்குள் நுழைவர். கலியுகத்தில் ஒருவர் துளசியை நினைத்தாலோ, வளர்த்தாலோ, வணங்கினாலோ அவர் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு இறுதியில் கிருஷ்ணரை அடைகிறார்கள்.

    துளசியை கொண்டு கிருஷ்ணரை பூஜிப்பவர் தன் முன்னோர் அனைவரையும் (பிறவித் தளையிலிருந்து) விடுவிக்கிறாh. துளசியின் மகிமையை பிறருக்குச் சொன்னால் ஆன்மீக உலகில் நிலையான ஓரிடம் காத்திருக்கும் என்பது திண்ணம். ஸ்ரீ துளசி ப்ரணாம் வ்ருந்தாயை துளசி தேவ்யாயை ப்ரியாயை கேஷவசஸ்ய கிருஷ்ண பக்தி ப்ரதே தேவி ஸத்யவத்யை நமோ நம: எம் பெருமான் கேசவனுக்கு மிகவும் பிரியமான, ஸ்ரீமதி துளசி தேவிக்கு, விருந்தாவன ராணிக்கு மீண்டும் மீண்டும் எனது வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.

    துளசிதேவி பகவான் கிருஷ்ணருக்கு பக்தி தொண்டு புரியக் கூடிய வரத்தை அளிக்கும் தாங்கள் மிகமிக உயர்ந்த ஸத்யத்தை உடையவர். நமோ நம : துளசி கிருஷ்ண ப்ரேயஸீ நமோ நம: ராதா கிருஷ்ண ஸேவா பாபோ ஏய் அபிலாஷி ஜே தோமார ஷரண லோய், தாரா வாஞ்ச பூர்ண ஹோய் க்ருபா கோரி கோரோ தாரே, வ்ருந்தாவன பாஸீ மோரர் ஏய் அபிலாஷ், பிலாஷ் குஞ்சே தியோவாஸ் நயனே ஹேரி போ ஸதா ஜுக லரூப ராஷி ஏய் நிவேதன தரோ, ஸகீர்; அனு கத கோரோ ஸேவா அதிகார தியே, கோரோ நிஜ தாஸி தீன கிருஷ்ண தாஸே கோய், ஏய் ஜனமோர ஹோய் ஸ்ரீ ராதா கோவிந்த ப்ரமே ஸதாஜேன பாஸி ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிரியமான துளசிதேவி தங்கள் முன் நான் மீண்டும் மீண்டும் வீழ்ந்து வணங்குகிறேன். ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணருக்கு பக்திதொண்டு செய்வதே எனது பூரணமான விருப்பம். தங்களை அடைக்கலமாகக் கொண்ட அனைவரின் விருப்பங்களும் பூர்த்தியாகிவிடும். தங்களது கருணையை அவர்பால் அருளி, அவரை விருந்தாவனவாசி ஆக்குகிறீர்கள்.

    ஸ்ரீ விருந்தாவன திவ்ய தேசத்தின் இனிய வனங்களில் எனக்கும் ஓர் இருப்பிடத்தை தாங்கள் அளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு ராதா மற்றும் கிருஷ்ணரின் அழகிய மதுர லீலைகளை நான் என்றும் எண்ணியிருப்பேன். விரஜபூமியின் இடையர்குலச் சிறுமியரைப் பின்பற்றுபவனாக என்னை ஆக்கிவிடுமாறு நான் வேண்டுகிறேன். பக்தித் தொண்டெனும் உயர்ந்த வரத்தை எனக்கு அளித்து தங்களது தாஸனாக என்னை ஆக்கிக் கொள்ள வேண்டுகிறேன்.

    ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் பணிவான சேவகனாகிய நான் வேண்டுவது, ஸ்ரீ ராதா மற்றும் கோவிந்தரின் தூய பக்தி தொண்டு புரிய வேண்டும் என்பதே!

    யானி கானிச பாபனி ப்ரஹ்ம ஹத்யாதிகானிச தானி தானி ப்ரணஷ்யந்தி ப்ரதக்ஷணே பதே பதே ப்ரம்மஹத்தி என்ற பாபம் மட்டுமன்றி, ஒருவன் செய்த அனைத்து பாவங்களும் ஸ்ரீமதி துளசி தேவியை வலம் வந்து வணங்குவதால் அழிந்து போகும்.

    Source:Sundar Sriram

  • #2
    Re: துளசியின் மகிமை !!

    அண்ணா, நமஸ்காரம்
    எங்களது வீட்டில் துளசி செடியை வீட்டின் முன் புறத்திலோ அல்லது பின் புறத்திலோ அல்லது இரு பக்கங்களிலோ வைத்து கொள்ள வசதி இல்லை.
    என்ன செய்வது?
    எனக்கு துளசி வைத்து தினமும் பூஜை செய்ய விருப்பம்
    தங்கள் அறிவுறை உடனே தேவை

    Originally posted by Padmanabhan.J View Post
    துளசியின் மகிமை !! பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ள ஒரு சில குறிப்புகள்...

    [ATTACH=CONFIG]1424[/ATTACH]

    ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான மற்றும் எல்லா வகையிலும் புனிதமான, துளசி தேவியை சாதாரணமாக தொடுவதாலும், பார்ப்பதாலும், உணரப்படுவதாலும், துளசியின் மண்ணை வணங்குவதாலும், துளசியைப் பற்றி கேட்டபதாலும், வளர்ப்பதாலும், நம் பாவங்கள் நீங்கப் பெற்று புனிதமடைவோம். துளசியை வணங்குவதால் விளையும் பயன்கள் துளசி அனைத்து பக்தி தொண்டுகளின் சாரம்.

    துளசி இலை பூ, வேர்கள், கிளைகள், நிழல் எல்லாம் ஆன்மீகமானவை. பக்தியுடன் துளசியின் இலையை கிருஷ்ணருக்கு அளிப்பவர் அவர் அருகிலேயே வாழ்வர். துளசியின் மண்ணை எடுத்து உடலில் பூசிக்கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குபவர், ஒவ்வொரு நாளும் நூறு நாள் பூஜை செய்த பயனை அடைவர். துளசி மஞ்சரியை கிருஷ்ணருக்கு அளிப்பவர் மற்ற எல்லா புஷ்பங்களையும் அளித்த பலனை பெறுவர். ஒருவர் துளசியை பார்த்தாலோ, அல்லது அது இருக்கும் வீட்டிற்கோ, தோட்டத்திற்கோ சென்றால் அவர் ஒரு பிராமணனை கொன்ற பாவத்தில் இருந்தும் கூட, விடுதலை பெறுகிறான். துளசி உள்ள காடுகள் வீடுகள் ஆகிய இடங்களில் கிருஷ்ணர் ஆனந்தமாக வசிக்கிறார்.

    துளசி உள்ள வீடுகள் எந்த கேடான காலத்திலும் வீழ்ச்சி அடையாது. அதுவும் அல்லாமல் எல்லா புனித ஸ்தலங்களிலும் புனிதமானது. துளசியின் வாசனை முகர்ந்து பார்க்கும் அனைவரையும் தூய்மையாக்கும். துளசி உள்ள இடங்களில் கிருஷ்ணரும், மற்ற எல்லா தெய்வங்களும் வசிப்பார்கள். துளசி இல்லாமல் கிருஷ்ணர் பூவோ, உணவோ அல்லது சந்தனத் தைலமோ ஏற்பதில்லை. துளசியைக் கொண்டு கிருஷ்ணரை தினமும் வணங்கும் பக்தர்கள், எல்லா ஸ்தலங்களையும், தானங்களையும், மற்றும் தியாகங்களையும் செய்தவர் ஆகிறார். சொல்லப் போனால் அவருக்கு செய்ய வேண்டிய வேறு கடமைகள் இல்லை. அத்தோடு, அவர் எல்லா இலக்கியம் மற்றும் புராணங்களையும் படித்தவர் ஆகிறார். கிருஷ்ணருக்கு படைக்கப்பட்ட துளசியை தலையிலோ, வாயிலோ போட்டுக் கொண்டவர் கிருஷ்ணரின் திருநாட்டிற்குள் நுழைவர். கலியுகத்தில் ஒருவர் துளசியை நினைத்தாலோ, வளர்த்தாலோ, வணங்கினாலோ அவர் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு இறுதியில் கிருஷ்ணரை அடைகிறார்கள்.

    துளசியை கொண்டு கிருஷ்ணரை பூஜிப்பவர் தன் முன்னோர் அனைவரையும் (பிறவித் தளையிலிருந்து) விடுவிக்கிறாh. துளசியின் மகிமையை பிறருக்குச் சொன்னால் ஆன்மீக உலகில் நிலையான ஓரிடம் காத்திருக்கும் என்பது திண்ணம். ஸ்ரீ துளசி ப்ரணாம் வ்ருந்தாயை துளசி தேவ்யாயை ப்ரியாயை கேஷவசஸ்ய கிருஷ்ண பக்தி ப்ரதே தேவி ஸத்யவத்யை நமோ நம: எம் பெருமான் கேசவனுக்கு மிகவும் பிரியமான, ஸ்ரீமதி துளசி தேவிக்கு, விருந்தாவன ராணிக்கு மீண்டும் மீண்டும் எனது வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.

    துளசிதேவி பகவான் கிருஷ்ணருக்கு பக்தி தொண்டு புரியக் கூடிய வரத்தை அளிக்கும் தாங்கள் மிகமிக உயர்ந்த ஸத்யத்தை உடையவர். நமோ நம : துளசி கிருஷ்ண ப்ரேயஸீ நமோ நம: ராதா கிருஷ்ண ஸேவா பாபோ ஏய் அபிலாஷி ஜே தோமார ஷரண லோய், தாரா வாஞ்ச பூர்ண ஹோய் க்ருபா கோரி கோரோ தாரே, வ்ருந்தாவன பாஸீ மோரர் ஏய் அபிலாஷ், பிலாஷ் குஞ்சே தியோவாஸ் நயனே ஹேரி போ ஸதா ஜுக லரூப ராஷி ஏய் நிவேதன தரோ, ஸகீர்; அனு கத கோரோ ஸேவா அதிகார தியே, கோரோ நிஜ தாஸி தீன கிருஷ்ண தாஸே கோய், ஏய் ஜனமோர ஹோய் ஸ்ரீ ராதா கோவிந்த ப்ரமே ஸதாஜேன பாஸி ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிரியமான துளசிதேவி தங்கள் முன் நான் மீண்டும் மீண்டும் வீழ்ந்து வணங்குகிறேன். ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணருக்கு பக்திதொண்டு செய்வதே எனது பூரணமான விருப்பம். தங்களை அடைக்கலமாகக் கொண்ட அனைவரின் விருப்பங்களும் பூர்த்தியாகிவிடும். தங்களது கருணையை அவர்பால் அருளி, அவரை விருந்தாவனவாசி ஆக்குகிறீர்கள்.

    ஸ்ரீ விருந்தாவன திவ்ய தேசத்தின் இனிய வனங்களில் எனக்கும் ஓர் இருப்பிடத்தை தாங்கள் அளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு ராதா மற்றும் கிருஷ்ணரின் அழகிய மதுர லீலைகளை நான் என்றும் எண்ணியிருப்பேன். விரஜபூமியின் இடையர்குலச் சிறுமியரைப் பின்பற்றுபவனாக என்னை ஆக்கிவிடுமாறு நான் வேண்டுகிறேன். பக்தித் தொண்டெனும் உயர்ந்த வரத்தை எனக்கு அளித்து தங்களது தாஸனாக என்னை ஆக்கிக் கொள்ள வேண்டுகிறேன்.

    ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் பணிவான சேவகனாகிய நான் வேண்டுவது, ஸ்ரீ ராதா மற்றும் கோவிந்தரின் தூய பக்தி தொண்டு புரிய வேண்டும் என்பதே!

    யானி கானிச பாபனி ப்ரஹ்ம ஹத்யாதிகானிச தானி தானி ப்ரணஷ்யந்தி ப்ரதக்ஷணே பதே பதே ப்ரம்மஹத்தி என்ற பாபம் மட்டுமன்றி, ஒருவன் செய்த அனைத்து பாவங்களும் ஸ்ரீமதி துளசி தேவியை வலம் வந்து வணங்குவதால் அழிந்து போகும்.

    Source:Sundar Sriram

    Comment

    • #3
      Re: துளசியின் மகிமை !!

      ஶ்ரீ: வெளிச்சம் வரக்கூடிய, அசுத்தம் பட வழியில்லாத எந்த இடத்திலும் துளசியை வைத்துக்கொள்ளலாம். உதாரணமாக உங்கள் வீட்டில் எப்படியும் ஜன்னல்கள் இருக்கும் எந்த ஜன்னல் மற்றவர்கள் அதிகம் ப்ரவேசிக்காத இடமாகவும், சூரிய ஒளி படக்கூடிய இடமாகவும் உள்ளதோ, அந்த ஜன்னலின் கீழ் ஒரு பலகையை (ஸ்டேண்ட் போல) பொருத்தி, அதில் வைத்துவிடலாம். ஜன்னல் வழியாகவே நீர் ஊற்றிக்கொள்ளலாம். இதுபோல தங்கள் இல்ல சூழ்நிலைக்குத் தக்க மாற்று வழிகளை யோசியுங்கள் நிச்சயம் கிடைக்கும். என்.வி.எஸ்

      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment

      Working...
      X