Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 092/100 அழகா ! அலங்கார ! நீ ஆளினும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 092/100 அழகா ! அலங்கார ! நீ ஆளினும்

    3. அழகர் அந்தாதி - 092/100 அழகா ! அலங்கார ! நீ ஆளினும் ஆம் ! இகழினும் ஆம் !

    அருளக்கொடி இடைப் பூ மாதும் நீயும் வந்து ஆளினும் ஆம்
    இருளக்கொடிய நமன் வரும் காலத்து இகழினும் ஆம்
    கருளக்கொடி அழகா ! அலங்கார ! வன் கஞ்ச நெஞ்சத்து
    உருளக்கொடிய உதைத்தாய் ! எனது உயிர் உன் உயிரே !

    பதவுரை : அருள + கொடி
    இருள் + அக் + கொடிய
    கருள + கொடி
    உருள் + அக்கு + ஓடிய

    கருளக்கொடி அழகா ! கருடக் கொடியை உடைய அழகர் பிரானே !
    அலங்காரனே அலங்காரனே !
    வன் கஞ்ச நெஞ்சத்து வலிய கம்சனது நெஞ்சில் உள்ள
    உருள் அக்கு ஓடிய உதைத்தாய் திரண்ட எலும்பு முறியும்படி உதைத்தவனே !
    எனது உயிர் உன் உயிரே என்னுடைய உயிர் உனக்கு அடிமையான உயிரே ஆகும்
    இருள் அக் கொடிய நமன்கரிய நிறமுள்ள அந்த கொடுமையான யமன்
    வரும் காலத்து வரும் அந்திம காலத்தில்
    கொடி இடைப் பூ மாதும் பூங்கொடி போல் மெல்லிய இடை உடைய திரு மகளும்
    நீயும் அருள வந்து ஆளினும் ஆம் நீயும் நற்கதி அருள வந்தாலும் சரி !
    இகழினும் ஆம் யமன் கொண்டு செல்லும்படி இகழ்ந்தாலும் சரி !


    --
    V.Sridhar

Working...
X