3. அழகர் அந்தாதி - 093/100 அழகா ! அலங்கார ! நின்னைத் தாள் பணிந்தே நின்றேன் !
உயிர்க்கும்படிக்கும் உன் ஆயிரம் பேர் , என்று ஒறுத்து அன்னைமார் ,
செயிர்க்கும்படிக்கு நின்றேன் ; என் செய்கேன் ? செழும் தேவர்களும்
அயிர்க்கும்படிக்குறள் ஆம் அழகா ! அலங்கார ! நெய்க்கும்
தயிர்க்கும்படிக்கும் செவ்வாய் மலர்ந்தாய் ! நின்னைத் தாள் பணிந்தே
பதவுரை : உயிர்க்கும் + படிக்கும்
அயிர்க்கும்படி + குறள்
தயிர்க்கும் + படிக்கும்
செழும் தேவர்களும் அயிர்க்கும்படி ஞானம் உடைய தேவர்களும் சந்தேகிக்கும்படி
குறள் ஆம் அழகா அலங்கார வாமன அவதாரம் செய்த அழகனே ! அலங்காரனே !
நெய்க்கும் தயிர்க்கும் படிக்கும் வெண்ணெயையும் தயிரையும் உலகத்தையும்
செவ்வாய் மலர்ந்தாய் உண்பதற்காக சிவந்த வாயைத் திறந்தவனே !
நின்னைத் தாள் பணிந்தே உயிர்க்கும் உன்னைத் திருவடி வணங்கி பெருமூச்செறிகிறாள்
உன் ஆயிரம் பேர் படிக்கும் உனது ஆயிரம் நாமங்களைச் சொல்கிறாள்
என்றுஅன்னைமார் ஒறுத்து என்று எனது தாய்மார்கள் என்னை வெறுத்து
செயிர்க்கும்படிக்கு நின்றேன் கோபிக்கும்படி நிற்கின்றேன்
என் செய்கேன் நான் இனி என்ன செய்வேன் ?
--
V.Sridhar
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks