Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 097/100 மாலை இலாமையால் மாலை எண்ண

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 097/100 மாலை இலாமையால் மாலை எண்ண

    3. அழகர் அந்தாதி - 097/100 மாலை இலாமையால் மாலை எண்ணி மாலையில் மாலை உற்றாள் !

    சோலையிலாமையில் சேர் திருமாலிருஞ்சோலை நின்றான்
    வேலையிலாமையில் வேடங்கொண்டான் புயம் ஏவப் பெறாச்-
    சேலையிலாமையிலங்கு கண்ணாள் அவன் தெய்வத் துழாய்
    மாலையிலாமையில் மாலை உற்றாள் அந்தி மாலையிலே

    பதவுரை : சோலை + இல் +ஆ + மையில்
    வேலையில் + ஆமையில்
    சேல் + ஐயில் + ஆம் + மை + இலங்கு
    மாலை + இலாமையில்


    சோலை இல் ஆ மையில் சேர் சோலைகளை இருப்பிடமாகக் கொண்ட மயில்கள் உள்ள
    திருமாலிருஞ்சோலை நின்றான் திருமாலிருஞ்சோலையில் நின்றவனும்
    வேலையில் ஆமையில் வேடங்கொண்டான் பாற்கடலில் ஆமையாய் அவதரித்தவனுமான
    புயம் ஏவப் பெறா அழகனின் தோள்களைத் தழுவாதவளும்
    சேல் ஐயில் ஆம் மீனையும் வேலையும் ஒத்த
    மை இலங்கு கண்ணாள் மை இடப்பட்ட கண்களை உடைய இந்த மங்கை
    அவன் தெய்வத் துழாய் மாலை இலாமையில் அவனது திவ்ய துளசி மாலை கிடைக்காததால்
    அந்தி மாலையிலே மாலை உற்றாள் மாலை வேளையில் மயக்கம் அடைந்தாள்

    --
    V.Sridhar

    Last edited by sridharv1946; 21-10-13, 12:53.
Working...
X