Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 005/108 பட்டருக

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 005/108 பட்டருக


    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி
    - 005/108 பட்டருக்கு
    நான் ஆட்பட்ட பயன் , நலம் தான் !

    நான் கூட்டில் வந்த அன்றே நான் அறியா நன்மை எல்லாம்
    தான் கூட்டி வைத்த நலம் தான் கண்டீர் - ஆம் கூட்டச்-
    சிட்டருக்கு வாய்த்த திரு அரங்கன் இன் அருளால்
    பட்டருக்கு ஆட்பட்ட பயன்

    பதவுரை :

    கூட்டம் ஆம் சிட்டருக்கு திரள் திரளாக உள்ள பெரியோர்களுக்கு
    வாய்த்த திரு அரங்கன் பொருந்தி இருக்கும் ஸ்ரீ ரங்க நாதனுடைய
    இன் அருளால் இனிமையான கிருபையால்
    நான் கூட்டில் வந்த அன்றே நான் இந்த சரீரத்தில் வந்து பிறந்த அப்பொழுதே
    நான் அறியா நன்மை எல்லாம் நான் அறிந்திடாத நல்ல வினைகளை எல்லாம்
    தான் கூட்டி வைத்த நலம் தான் உண்டாக்கிய நன்மை என்பது
    பட்டருக்கு ஆட்பட்ட பயன் ஸ்ரீ பராசர பட்டர்க்கு நான் சிஷ்யனான பயன் ஆகும்

    V.Sridhar

    Last edited by sridharv1946; 22-10-13, 21:24.
Working...
X