ஒன்றரை அடி உயர சிவலிங்கம் உருவம் கொண்ட ஒரு முகம் ருத்ராட்சம்.


Click image for larger version. 

Name:	Rudra.jpg 
Views:	8 
Size:	43.5 KB 
ID:	1437

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவலிங்கம் உருவம் கொண்ட ஒன்றரை அடி உயர ருத்ராட்சம் உள்ளிட்ட பல்வேறு அபூர்வ ருத்ராட்சங்களை வழக்குரைஞர் ஒருவர் பாதுகாத்து வருகிறார்.


ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் எஸ். மகேஸ்வரன்.

இவர் கிருஷ்ணன்கோவிலில் அன்னை ஸ்ரீகாயத்ரி தியான பீடத்தை நடத்தி வருகிறார். இங்கு இமயமலை உள்ளிட்ட பகுதியில் மட்டுமே வளரும் ருத்ராட்ச மரம் ஒன்றை வளர்த்து வருகிறார்.

தற்போது இவருக்கு நேபாளம் மற்றும் இந்தோனேசியாவில் மட்டுமே கிடைக்கும் 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை அபூர்வமாக காய்க்கும் ருத்ராட்சம் கிடைத்துள்ளது.


இதுகுறித்து வியாழக்கிழமை மாலை அவர் கூறியதாவது: சிவனுடைய கண்களில் இருந்து விழுந்த கண்ணீர் துளியையே ருத்ராட்சம் என்பர். ருத்ராட்சம் ஒரு முகம் முதல் 21 முகம் வரையுள்ளது. இதில் ஒரு முகம் கிடைப்பது அரிதாகும். தற்போது ஒரு முகம் உள்ள ருத்ராட்சத்தில் உலக அதிசயம் போன்று ஒன்றரை அடி, ஒன்றே கால் அடி, ஒரு அடி மற்றும் முக்கால் அடியில் சிவலிங்கம் வடிவில் ஏகமுகமாக அமைந்து கிடைத்துள்ளது. மேலும் கெüரி சங்கரம், திரிவேணி அம்சம், சூரியகலை, சந்திரகலை உள்ளிட்ட வடிவங்களிலும் 8 அபூர்வ ருத்ராட்சங்கள் கிடைத்துள்ளன.

இது சில வட இந்திய பக்தர்கள் தங்களால் பாதுகாக்க இயலவில்லை எனக் கூறி என்னிடம் கொடுத்துள்ளனர். இதுபோன்ற அபூர்வ ருத்ராட்சத்தை பார்ப்பதே புண்ணியம் என்று நினைக்கும் இக் காலத்தில், வரும் தைப்பூசத்தன்று கிருஷ்ணன்கோவிலில் உள்ள தியான பீடத்தில் பக்தர்களின் தரிசனத்துக்கு இதனை வைக்க உள்ளேன்.இதனைப் பாதுகாப்பது மிகவும் கடினம். ஆண்டுக்கு ஒரு முறை தூய்மையான வேப்ப எண்ணெய் பூசி பாதுகாக்க வேண்டும். தற்போது என்னிடம் உள்ள பரிசுத்தமான வெள்ளி, செம்பு, பித்தளைக் குடங்களின் மேல் இதனை வைத்து, இதற்கென பிரத்யேகமாக தேக்கு மரத்தில் கண்ணாடி கூண்டு அமைத்து அதில் வைத்துள்ளேன் என்றார் மகேஸ்வரன்.

Source:mahesh