சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: வண்டி எண் 06748 மதுரை , எழும்பூர் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் மதுரையில் 31 ம் தேதி இரவு 11.55 க்கு புறப்படும். எழும்பூருக்கு மறுநாள் காலை 8.55 க்கு வந்து சேரும்.

இந்த ரயில் கொடைரோடு, திண்டுக் கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் நிலையங்களில் நிற்கும். வண்டி எண் 06747 எழும்பூர், திருநெல்வேலி சிறப்பு ரயில், எழும்பூரிலிருந்து நவம்பர் 1 காலை 10.50 மணிக்கு புறப்படும். மறுநாள் அதிகாலை 02.30க்கு திருநெல்வேலிக்கு சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி ஆகிய நிலையங்களில் நிற்கும்.

வண்டி எண் 06749 திருநெல்வேலி, எழும்பூர் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் நவம்பர் 4 ம் தேதி மாலை 6.15 (18.15)க்கு புறப்படும். மறுநாள் 06.05க்கு எழும்பூரை வந்தடையும். வண்டி எண் 06626 கோவை, சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் கோவையில் நவம்பர் 1 மற்றும் 4 ம் தேதி 12.30 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 08.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.

வண்டி எண் 06625 சென்ட்ரல், கோவை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்ட்ரலில் 12.30 மணி க்கு புறப்படும், கோவைக்கு 09.00 மணி க்கு சென்றடையும்.
இந்த ரயில்கள் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், ஆகிய நிலையங்களில் நிற்கும். இதில் வண்டி எண் 06626 பெரம்பூரிலும் நிற்கும். வண்டி எண் 06625 வாலஜா ரோடு, குடியாத் தம், வாணியம்பாடி, மொரப்பூர், பொம்மிடி, கோவை வடக்கு ஆகிய நிலையங்களிலும் நிற்கும்.

வண்டி எண் 06752 திருநெல்வேலி, சென்ட் ரல் சிறப்பு ரயில் 31 ம் தேதி மாலை 5.45 க்கு திருநெல்வேலியில் புறப்படும். மறுநாள் காலை 07.45 க்கு சென் ட்ரல் வந்தடையும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத் தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், மோகனூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், ஜோலார்பேட்டை, காட் பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய நிலையங்களில் நிற்கும். வண்டி எண் 06751 சென்ட்ரல், திருநெல்வேலி சிறப்பு ரயில் சென்ட்ரலில் 1 ம் தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும். மறுநாள் இரவு 12.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

இந்த ரயில் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங் கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில் பட்டி ஆகிய நிலை யங்களில் நிற்கும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை முதல் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருவனந்தபுரம்,சென்ட்ரல், திருச்சி, சீரடி, நாகர்கோயில், சென்ட்ரல், நாகர்கோயில், கச்சிகுடா, கொச்சுவெலி, திப்புர்கா, கொச்சுவெலி, பெங்களூர் ஆகிய தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமாக இருப்பதால் இப்போது இந்த 6 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
Source:
தினகரன் நாளிதழ்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends