Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 014/116 திருப்ப

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 014/116 திருப்ப

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 014/116 திருப்பேரானை சிந்தித்தால் இடர் இல்லை !

    திருப்பதி - 8/108. சோழ நாடு - 8/40 : திருப்பேர் நகர்

    போம்மானை எய்து , பொரும் ஆனைக் கொம்பு பறித்து ,
    ஆம் ஆனை மேய்த்து உவந்த அம்மானை , தாமச்-
    செழுந்திருப் பேரானை , சிறு காலே சிந்தித்து
    எழுந்திருப்பேற்கு உண்டோ இடர்


    பதவுரை :


    போம்மானை எய்து ஓடிப்போன மாரீசன் ஆகிய மானை அம்பு எய்தும் ,

    பொரும் ஆனை போர் செய்த குலவயாபீடம் எனும் யானையின்

    கொம்பு பறித்து தந்தங்களைப் பிடுங்கியும் ,

    ஆம் ஆனை மேய்த்து பசுக் கூட்டத்தை மேய்த்தும் ,

    உவந்த அம்மானை மகிழ்ந்த ஸ்வாமியும்

    தாமச் செழுந்திருப் பேரானை வளம் உள்ள திருப் பேரில் இருப்பவனும் ஆன திருமாலை

    சிறு காலே சிந்தித்து விடியற்காலையில் தியானித்துகே கொண்டே

    எழுந்திருப்பேற்கு எழுந்திருக்கும் எனக்கு

    உண்டோ இடர் பிறவித் துன்பம் வருமோ ? (வராது)


Working...
X