காஞ்சி மகாபெரியவர் சித்தி அடைவதற்கு ஒரு ஆண்டு முன்பாக, உடல் தளர்ச்சி பெற்ற நிலையில், ஒருநாள் மாலையில், தனது சிஷ்யர்களை அழைத்து தான் சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜப் பெருமானை தரிசிக்க வேண்டுமென்றும், அவருடைய பூஜையில் அணிவிக்கப்படும் ஸ்ரீ குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டுமென்றும் கூறினார். (குஞ்சிதபாதம் என்பது பல வகை வேர்களால் உருவாக்கப்பட்டு, நடராஜப் பெருமானுக்கு அணிவிக்கப்படுவது) குஞ்சிதபாதத்தை தரிசித்தால் நோய் அகலுவதுடன், மோட்சம் கிடைக்கும்.

இதைக்கேட்ட சிஷ்யர்களுக்கு கலக்கம். பெரியவரை சிதம்பரத்திற்கு எவ்வாறு அழைத்துச் செல்வது என சிந்தித்தனர். என்ன ஆச்சரியம்! மறுநாள் காலை சூரிய உதயத்துக்கு முன்பாக, சிதம்பரம் நடராஜருக்கு பூஜை செய்யும் தீட்சிதர்கள் சிலர், காஞ்சிபுரம் சங்கரமடம் வந்து பெரியவரை தரிசித்து பிரசாதம் கொடுக்க அனுமதி கேட்டனர். சிஷ்யர்கள் வியப்பின் உச்சிக்கே போய்விட்டனர்.

மகாபெரியவரிடம் சென்று விபரத்தைக் கூறவும், அவருக்கும் பேரானந்தம். தீட்சிதர்களை அருகில் வருமாறு சைகையால் அழைத்து, பிரசாதத்தட்டிலிருந்து குஞ்சிதபாதத்தை எடுத்து, தலையில் வைத்துக்கொண்டார். குஞ்சிதபாதத்துடன் உள்ள மகாபெரியவரின் படம் நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. "தேடி வந்த சிதம்பரம்' படத்தை நாமும் வணங்கி நற்பலன் பெறுவோம்.


Here is a view of the wonderful photo of Periva wearing the Kunchita paatham

Click image for larger version. 

Name:	Kunjithapatham.jpg 
Views:	6 
Size:	28.8 KB 
ID:	1442

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
Source:http://www.periva.proboards.com/thread/3807