4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 015/116 ஆதனூர் எந்தை அடியார் மயங்கார் !

திருப்பதி - 9/108. சோழ நாடு - 9/40 : திரு ஆதனூர்

இடர் ஆன ஆக்கை இருக்க முயலார் ;
மடவார் மயக்கின் மயங்கார் - கடவுளர்க்கு
நாதன் ஊர் ஆதரியார் ; நான் எனது என்னார் ; அமலன்
ஆதனூர் எந்தை அடியார்

பதவுரை :

அமலன் ஆதனூர் குற்றம் அற்றவரும் ஆதனூரில் இருப்பவரும் ஆன

எந்தை அடியார் எம்பெருமானது பக்தர்கள்

இடர் ஆன ஆக்கை துன்பங்களுக்கு இடமாகிய தனது உடல்

இருக்க முயலார் நிலைத்து இருக்க முயற்சி செய்ய மாட்டார்கள்

மடவார் மயக்கின் மயங்கார் பெண்கள் மோக வலையில் சிக்க மாட்டார்கள்

கடவுளர்க்கு நாதன் ஊர் ஆதரியார் தேவர் தலைவன் இந்திரன் ஊரையும் விரும்ப மாட்டார்கள்

நான் எனது என்னார் அகங்கார மமகாரச் சொற்களை சொல்ல மாட்டார்கள்--
V.SridharDear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends