அன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே.


பகவதானுபவத்தை அனுபவிக்க, கர்மமார்க்கம், பக்திமார்க்கம் இப்படி இரண்டு... சரி! சேவை என்ற பரோபகார மார்க்கமும் உண்டு என்கிறார்களே... இது பற்றிய பண்டைய வழக்கம் ஏதும் உண்டோ?

அன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம், சமூக சேவை, ஸோஷியல் சர்வீஸ் என்று இந்த நாட்களில் ஆர்ப்பாட்டமாகப் பிரகடனம் பண்ணுவதை, முற்காலங்களில் எந்தப் பகட்டுமில்லாமல் சுபாவமாகவே மக்கள் செய்து வந்தனர். இதற்குப் "பூர்த்த தர்மம்' என்று ஒரு பெயர்.ஜனங்களுக்காகக் கிணறு, குளம் வெட்டுவது, அன்னதானம், ஆத்ம க்ஷமத்துக்காகக் கோயில் கட்டுவது, அதன் அங்கமாக நந்தவனம் அமைப்பது எல்லாம் "பூர்த்த தர்மத்தில்' சேர்ந்தவை. இதில் கிணறு, குளம் வெட்டுவது முதலில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் பேச்சுவழக்கில்கூட "அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? வெட்டிக் கொண்டு இருக்கிறானா?' என்கிறோம். "வெட்டுவது அவ்வளவு பெரிய தர்மம். தாகமெடுத்த பசுக்களும் மற்ற பிராணிகளும் நீர் அருந்துவதற்காகக் கிராமத்துக்கு வெளியே மேய்ச்சல் பூமியில் ஒரு குளம் வெட்டினால் எவ்வளவோ புண்ணியம்.ஒரு கிராமத்தில் அல்லது பேட்டையில் இருக்கிற சகலரும் - பணக்காரர், ஏழை என்கிற வித்யாசமில்லாமல் - ஒன்றுசேர்ந்து மண்வெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு இப்படிப்பட்ட சரீரப் பிரயாசையுள்ள பரோபகார சேவையில் ஈடுபடவேண்டும். இதனால் சமூக ஒற்றுமையும் அதிகமாகும். புத்தியை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக கல்வி, மனசு சுத்தமாக தியானம், வாக்குசுத்தமாக சுலோகம் - இப்படியெல்லாம் இருக்கின்றன அல்லவோ? சரீரம் சுத்தமாவதற்கு அந்த சரீரத்தால் சேவை செய்ய வேண்டும்.Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஉழைக்க உழைக்கச் சித்த சுத்தியும் வரும். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றில்லாமல் எல்லோருடனும் சேர்ந்து மண்ணை வெட்டும்போது அகங்காரத்தையும் வெட்டி எடுத்ததாகும்.குளத்தில் தண்ணீர் ஊறுவதைவிட நம் இருதயத்தில் ஊறுகிற அன்பே முக்கியம். வெளிவேஷம், டெமான்ஸ்ட்ரேஷனே வேண்டாம். அவரவரும் பிறருக்குத் தெரியாமல் ஏதாவது ஒற்றையடிப் பாதைக்குப் போய், அங்கேயிருக்கிற கண்ணாடித் துண்டுகளை அப்புறப்படுத்தினால்கூடப் போதும் - அதுவே பரோபகாரம்; சித்த சுத்தி என்கிற ஆத்மலாபமும் ஆகும்.Source:harikrishnamurthy