4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 018/116 பேறு ஆகச் சேறைக்கு நாயகன் பேர் செப்பு !

திருப்பதி -
12/108. சோழ நாடு - 12/40 : திருச்சேறை


சென்று சென்று செல்வம் செருக்குவார் வாயில் தொறும்
நின்று நின்று தூங்கும் மட நெஞ்சமே ! இன் தமிழைக்-
கூறைக்கும் சோற்றுக்கும் கூறாதே , பேறு ஆகச்-
சேறைக்கு நாயகன் பேர் செப்பு


பதவுரை :செல்வம் செருக்குவார் செல்வத்தினால் கர்வம் அடைந்தவர்களை

வாயில் தொறும் சென்று சென்று வீட்டு வாசல் தோறும் போய்ப் போய்

நின்று நின்று அங்கே நெடு நேரம் நின்று

தூங்கும் மட நெஞ்சமே சோர்ந்து போகும் அறியாமை உடைய என் மனமே !

இன் தமிழை இனிய தமிழ்ப் பாடல்களை

கூறைக்கும் சோற்றுக்கும் கூறாதே துணிக்காகவும் , உணவுக்காகவும் மனிதனைப் பாடாமல்

பேறு ஆக முக்தி கிடைக்கும்படி \

சேறைக்கு நாயகன் பேர் செப்பு
திருச்சேறை நாதனைப் பாடுவாயாக !
Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends--
V.Sridhar