பழங்களை பழுக்க வைக்க புதிய முறை!
மனிதர்களுக்கு தீமை ஏற்படுத்தாத வகையில், பழங்களை பழுக்க வைக்கும் புதிய முறையை கண்டுபிடித்துள்ள, விஞ்ஞானி முஸ்தபா:
நான்,

திருச்சியில் உள்ள, தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின், இயக்குனராக பணியாற்றுகிறேன். பொதுவாக, செயற்கை முறையில், 'கால்சியம் கார்பைடு' பயன்படுத்தி, பழங்களை பழுக்க வைப்பர். இதனால், புற்றுநோய் உட்பட, பல நோய்கள் ஏற்பட, வாய்ப்புகள் உள்ளன. 'எத்திலீன்' என்ற வேதிபொருள் தான், காய்கள் பழங்களாக பழுக்க உதவுகின்றன. இயற்கையிலேயே எல்லா பழங்களிலும், எத்திலீன் வாயு இருக்கும். இந்த வாயு வெளிப்படும் போது தான், மரத்தில் உள்ள காய்கள், பழங்களாக பழுக்கின்றன. 'ரோபஸ்டா, ஜி9' போன்ற வாழை ரகத்தின் காய்கள், வெயில் காலத்தில் மஞ்சள் நிறமாக மாறாமல், அப்படியே பச்சை நிறத்துடனேயே இருக்கும். இதனால், வாழை பழங்கள் எளிதில் பழுக்காமல், விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே, மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், இயற்கையாக பழங்களை பழுக்க வைக்கும் புதிய முறையை கண்டுபிடித்தோம். எங்களின் இப்புதிய தொழில்நுட்பத்தில், வாழைக் காய்களை, 'கோல்டு ஸ்டோரேஜ்' முறையில், 20 முதல், 22 டிகிரி சென்டிகிரேட் குளிரில் பதப்படுத்தி, அதனுள், 1,000 பி.பி.எம்., அளவில் எத்திலீன் வாயுவை செலுத்துவோம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
ஏற்கனவே, பழங்களினுள் உள்ள எத்திலீன் வாயுவை, இந்த அதிகப்படியான வாயு தூண்டுகிறது. இப்படி தொடர்ச்சியாக, 24 மணி நேரம் செய்யும் போது, பழங்கள் இயற்கையில் பழுப்பதை போலவே பழுக்கின்றன. இதில், எவ்விதத்திலும் செயற்கை தன்மை கிடையாது. வெளியிலிருந்து செலுத்தும் எத்திலீன் வாயு, வெறும் ஊக்கியாக மட்டுமே செயல்படும். இதனால், கால்சியம் கார்பைடு போன்று புற்றுநோயை உண்டாக்கும் தீமைகள், இதில் கிடையாது. மேலும், இம்முறையில் பழுத்த பழங்கள் அதிக இனிப்புடன், நல்ல மஞ்சள் நிறத்தில் இருப்பதால், சந்தைகளில் அதிக விலைக்கு விற்கலாம்.

தொடர்புக்கு: 0431-2618104.


http://www.dinamalar.com/news_detail...835602&Print=1