தாய்மைக் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய உணவுமுறை குறித்துச் சொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா

கடைசி 3 மாதங்களில், குழந்தைகளின் உடல் உறுப்பு வளர்ச்சி அதிகமாக இருக்கும். தாயின் எடையும் கூடும். இதனால் கொழுப்பு உணவுகள், அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள், அதிகப் புரதம் ஆகியவற்றை இரவில் தவிர்க்கவும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஒவ்வொரு வேளையும் உணவுக்குப் பின் 10 நிமிட வாக்கிங் அவசியம். ரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தாத லோ கிளைசமிக்உணவுகள் நல்லது. இரும்புச்சத்து மற்றும் கால்சியம் அதிகம் உள்ள பழங்கள், காய்கள் மற்றும் தானியங்கள் ஆகியவற்றை அதிகளவில் சேர்க்க வேண்டும்.

தாய் சோயா மில்க் சாப்பிட்டால், குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். கொழுப்பு நீக்கிய பால், பாலாடைக்கட்டி சேர்த்துக்கொள்ளலாம். கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ள தானியங்கள் சோளம், சோயா, ஓட்ஸ் ஆகியவற்றின் மூலம் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். குழந்தையின் வளர்ச்சிக்கும் உகந்ததாக இருக்கும்.

ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, மாம்பழம் அவசியம் சேர்த்துக்கொள்ளவும். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ள உணவுகள் உதவும். இந்த வேளையில் தாயின் கால்களில் வீக்கம் ஏற்படுவதால் உணவில் உப்பு மற்றும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும். காபி குடிப்பதைத் தவிர்க்கவும்.

நல்ல கொழுப்பு உள்ள உணவுகள் சேர்க்கலாம். எடையைக் கூட்டாமல், தாய், சேய் இருவரின் வளர்ச்சிக்கு ஏற்ற உணவுமுறையைக் கடைபிடிப்பதன் மூலம் ஆரோக்கியமான குழந்தையை மிக மகிழ்ச்சியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.


Source:http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=1926&Cat=500