Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 021/116 கண்டியூ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 021/116 கண்டியூ

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 021/116 கண்டியூர் கூப்புக என் கை !

    திருப்பதி - 15/108. சோழ நாடு - 15/40 : திருக் கண்டியூர்


    பேசவரின் தென் அரங்கன் பேர் எல்லாம் பேசுக , வாய்
    கேசவனைக் காண்க , விழி ; கேட்க , செவி ; ஈசனார்
    உண்டி ஊர் தோறும் உழன்று இரவாமல் தவிர்த்தான்
    கண்டியூர் கூப்புக என் கை


    பதவுரை :


    பேசவரின் பேசத் தொடங்கினால்

    தென் அரங்கன் பேர் எல்லாம் அழகிய ஸ்ரீ ரங்க நாதருடைய நாமங்களை எல்லாம்

    வாய் பேசுக என்னுடைய வாய் பேசட்டும் !

    விழி
    கேசவனைக் காண்க என் கண்கள் கேசவனைப் பார்க்கட்டும் !

    செவி கேட்க எனது காதுகள் அவன் புகழையே கேட்கட்டும் !

    ஈசனார் ஊர் தோறும் உழன்று சிவன் ஊர்கள் தோறும் அலைந்து

    உண்டி இரவாமல் தவிர்த்தான் உணவை யாசிப்பதைத் தவிர்த்தவனுடைய

    கண்டியூர் கூப்புக என் கை திருக்கண்டியூரை எனது கைகள் வணங்கட்டும்
    --



    V.Sridhar
    Last edited by sridharv1946; 28-10-13, 21:26.
Working...
X