Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 023/116 கண்ண புர&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 023/116 கண்ண புர&#

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 023/116 கண்ண புரத்தாய் ! உன் கழல் விடேன் !


    திருப்பதி - 17/108. சோழ நாடு - 17/40 : திருக்கண்ணபுரம்



    பேறு தரினும் ; பிறப்பு , இறப்பு , நோய் , மூப்பு
    வேறு தரினும் ; விடேன் கண்டாய் - ஏறு நீர்
    வண்ண புரத்தாய் ! என் மனம் புகுந்தாய் ! வைகுந்தா !
    கண்ண புரத்தாய் ! உன் கழல்


    பதவுரை :



    ஏறு நீர் வண்ண புரத்தாய் அலை கடல் நீர் போல் கரிய வண்ணம் கொண்டவனே !
    என் மனம் புகுந்தாய் என் மனத்தில் வசிப்பவனே !
    வைகுந்தா கண்ண புரத்தாய் ஸ்ரீ வைகுண்டத்திலும் கண்ணபுரத்திலும் இருப்பவனே !
    பேறு தரினும் அடியேனுக்கு நீ மோக்ஷத்தையே கொடுத்தாலும்
    வேறு பிறப்பு , இறப்பு , அல்லது ஜனனம் , மரணம்
    நோய் , மூப்பு தரினும் வியாதி , கிழத்தனம் இவைகளைக் கொடுத்தாலும்
    உன் கழல் விடேன் உனது திருவடிகளை விட்டு ஒரு போதும் நீங்க மாட்டேன்


Working...
X