Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 024/116 திருவால

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 024/116 திருவால

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 024/116 திருவாலி மாயனையே சேர்ந்து உய்ந்தேன் !


    திருப்பதி - 18/108. சோழ நாடு - 18/40 : திருவாலி


    கழன்று போம் வாயுவினைக் கட்டாமல் தீர்த்தம்
    உழன்று போய் ஆடாமல் உய்ந்தேன் - அழன்று
    பொரு வாலி காலன் பர காலன் போற்றும்
    திருவாலி மாயனையே சேர்ந்து


    பதவுரை :


    அழன்று பொரு வாலி காலன் கோபித்துப் போர் செய்த வாலிக்கு யமன் ஆனவனும்
    பர காலன் போற்றும் திரு மங்கை ஆழ்வார் துதித்த
    திருவாலி மாயனையே சேர்ந்து திரு வாலியில் இருக்கும் மாயனைப் பற்றிக் கொண்டதால் ,
    கழன்று போம் உடம்பிலிருந்து வெளியே செல்லும்
    வாயுவினைக் கட்டாமல் மூச்சுக் காற்றை பிராணாயாமத்தால் அடைக்காமலும்
    உழன்று போய் தீர்த்தம் ஆடாமல் வருந்தி சென்று புண்ணிய தீர்த்தம் ஆடாமலும்
    உய்ந்தேன் நற்கதியை அடைந்தேன்


    Last edited by sridharv1946; 29-10-13, 14:03.
Working...
X