பஞ்சாங்கம்


பஞ்சாங்கம் எனும் சொல் எல்லோராலும் நன்கு அறியப்பட்டதே. இதன் பொருளை அறிந்தோ அறியாமலோ பலர் இச்சொல்லை உபயோகிக்கின்றனர். எடுத்துக்காட்டாக'பழைய பஞ்சாங்கம்' 'அபத்த பஞ்சாங்கத்திற்கு அறுபது நாழிகையும் தியாஜ்யம்'என்றெல்லாம் கூறுவர். இச்சொல்லின் பொருள் என்ன?

பஞ்ச எனும் சொல்லுக்கு ஐந்து என்று பொருள்.'பஞ்சவடி'எனும் சொல்லில், வடஎன்பதற்கு ஆலமரம்என்று பொருள். ஐந்து ஆலமரங்களின் தொகுப்பே பஞ்சவடியாகும். இவ்வாறே'ஆப'என்பதற்குநீர்என்று பொருள். ஐந்து நதிகளால் சிறந்து விளங்குவதால்'பஞ்சாப்' என்று புகழப்படுகிறது. அவ்வாறே பஞ்சாங்கம் என்பதற்கு ஐந்து அங்கங்களைக்கொண்டது என்பது பொருளாகும்.

இந்த ஐந்து அங்கங்கள் முறையே 1. திதி, 2. வாரம், 3. நட்சத்திரம், 4. யோகம், 5.கரணம்ஆகும். இந்த ஐந்து அங்கங்களுக்குள் முதலாவதான திதியைப் பார்ப்போம். திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையேயுள்ள தூரமாகும். இந்தத் திதிகள்சுக்கில பட்சம், கிருஷ்ண பட்சம் என்று இரண்டு வகைப்படுத்தியுள்ளார்கள்.


சுக்கில எனும் ஸ்ம்ஸ்க்ருத சொல்லுக்கு வெண்மை என்றும் கிருஷ்ண எனும் ஸ்ம்ஸ்க்ருத சொல்லுக்கு கருமை என்றும் பொருளாகும். சூரியனும் சந்திரனும் ஒரே பாகை, கலையில் இருப்பது அமாவாசைஆகும். சூரியனுக்கு பாகை 180-ல் சந்திரன் இருந்தால் பௌர்ணமி ஆகும்.எனவே சூரியனிடமிருந்து நகர்ந்து செல்லச் செல்ல சந்திரனின் பிறை நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகக் கண்ணுக்குத் தெரியவரும்.

இவ்வாறு தினமும் வளர்ந்து வருவதால் வளர்பிறைக் காலம் என்பர். பௌர்ணமி அல்லது பூர்ணிமைக்குப் பின் முழு மதியிலிருந்து தினம் கொஞ்சம் கொஞ்சம் குறைவுபட்டுத் தெரியவரும். இவ்வாறு தேய்வதால் இதைத் தேய்பிறைக்காலம் என்பர். இவ்வாறு வளர்பிறைக் காலம் பதினைந்து நாட்களும், தேய்பிறைக் காலம் பதினைந்து நாட்களும் கொண்டது ஒரு மாதமாகும்.Source:http://www.haaram.com/CompleteArticle.aspx?aid=692019&ln=ta

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends