Announcement

Collapse
No announcement yet.

தேடி வந்து தேவியர் அருளும் தீபாவளித் திர

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேடி வந்து தேவியர் அருளும் தீபாவளித் திர

    தேடி வந்து தேவியர் அருளும் தீபாவளித் திருநாள்!
    தீபாவளி



    Click image for larger version

Name:	deepavaliom.jpg
Views:	1
Size:	77.0 KB
ID:	35382

    தீபாவளிப் பண்டிகையின் சிறப்பி னைப் பற்றி விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம், சேஷ தர்மம், ஸ்மிருதி முக்தாபலம் முதலிய நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. நித்யான்னிகம் என்ற நூலிலும் தீபாவளி மகிமை கூறப்பட்டுள்ளது. கண்ணனிடம் நரகாசுரன் மரண சமயத்தில் வரம் கேட்டதால் ஏற்பட்டது தீபாவளித் திருநாள் என்பது யாவரும் அறிந்த ஒன்றாகும். இந்த புண்ணிய தினத்தில்தான் திருமால் திரு மகளைத் திருமணம் புரிந்து கொண்டதாக விஷ்ணு புராணம் கூறுகிறது. இதனால் தீபாவளியை "லக்ஷ்மீ பரிணயதினம்' என்றே அழைப்பதுண்டு.

    இப்படி விவாக கோலத் தில் இருந்த லக்ஷ்மி நாராயண னைத் தேவர்கள் ஒவ்வொரு வராக வந்து வணங்கினர். அப்போது யமதர்மனும் பணிந்து வணங்கினான். உடனே தேவி யமனிடம், "இன்றைய தினம் பண்டிகையை முறைப்படி கடைப்பிடிப்பவர்களது வீட்டில், என் உத்தரவின்றி நீ உயிர்களைக் கவர்ந்து செல்லக்கூடாது' என்று உத்தரவு பிறப்பித்தாள். தர்மராஜனும் ஸ்ரீதேவியின் ஆணைப்படியே நடப்பதாக வாக்களித்தான். இதனால் மகிழ்ந்த அலைமகள் யமனிடம், "இன்று உன்னையும் மனிதர்கள் ஆசாரத்து டன் சோபனாட்சதைகளால் பதினான்கு தர்ப்பணங்கள் செய்து திருப்தி செய்விக்கட் டும்' என்று வரம் அளித்தாள். இதுவே யம தர்ப்பணமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

    தவிர தீபாவளியன்று பகவான் நரகாசுரனை வதம் செய்யச் சென்றபோது, அரக்கர்கள் லக்ஷ்மி தேவியைக் கவர்ந்து செல்ல முயற்சித்தனர். உடனே திருமகள் சூட்சும ரூபம் தரித்து எண்ணெயில் எரிந்து கொண்டிருந்த தீபத்தில் மறைந்துவிட்டாள்; நரகனை வதைத்துத் திரும்பிய பகவான் அரக்கர்களைக் கொன்று தேவியை மீட்டார் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. இதனால் தான் அன்று தீபத்தையும் தலத்தையும் லக்ஷ்மி ஸ்வரூபமாகக் கொண்டாடுகிறோம். தீப பூஜையும் வட இந்தியாவில் செய்யப்படு கிறது.

    தீபாவளிப் பண்டிகையைக் கடைப்பிடிப் பதற்கான விதிமுறைகள் சாஸ்திரங்களில் கூறப்படுகின்றன. ஐப்பசி மாதம் தேய்பிறை யில், அமாவாசைக்கு முன் தினமான சதுர்த்தசியின் பின் இரவில், அதிகாலை மூன்று மணியளவில் துயில் எழ வேண்டும். தீபாவளிக்கு முன் தினம் இரவே வீடு முழுதும் மெழுகிக் கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். அதிகாலையில் எழுந்ததும் சுத்த மான தண்ணீரை எடுத்துக் குடத்தில் நிரப்பி, சந்தன, குங்கும அட்சதைகளாலும் மலர் களாலும் அலங்கரிக்க வேண்டும்.

    பிறகு ஆல், அரசு, புரசு, அத்தி, மாவலிங் கம் ஆகிய ஐந்து மரங்களின் பட்டைகளை யும் தண்ணீரில் சேர்த்துக் கலந்து வெந்நீர் தயார் செய்ய வேண்டும். வெந்நீரைத் தயாரித்த பிறகு எண்ணெய்க் குளியலுக்கு முன்பு, வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் நாயுருவிச் செடியினால் தங்களது தலையை மூன்று முறை சுற்றி, பிறரது காலடி படாத இடத் தில் அந்தச் செடியினை எறிந்துவிட வேண்டும். இவ்விதம் செய்வதால் நமக்கு ஆத்ம ரக்ஷையும் ஐஸ்வர்யமும் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதற்குக் காரணம் என்ன வென்றால், ஒரு சமயம் வேத புருஷனான பிரம்ம தேவனிடம் இருந்து அரக்கர்கள் வேதத்தைத் திருடிச் செல்ல எண்ணினார்கள். உடனே நான்முகன் "அபாமார்க்கம்' என்று அழைக்கப்படும் நாயுருவிச் செடிகளாக மாறித் தன்னை மறைத்துக் கொண்டார். ஹரி நாராயணன் தோன்றி அரக்கர்களைக் கபடமாக வதம் செய்தார். தீபாவளி புண்ணிய தினத்தில்தான் மேற்படி நிகழ்ச்சியும் நடைபெற்றது. வேத புருஷனையே ரட்சித்த காரணத்தால்தான் நாயுருவிச் செடியை தீபாவளியன்று அதிகாலையில் நாமும் நமது ரட்சையாகப் பயன்படுத்துகிறோம்.

    இவ்விதம் ரட்சை செய்துகொண்ட பிறகு, தீபம் ஏற்றி, தைலம், வாசனாதி திரவியப் பொடிகள், லேகியம், புத்தாடைகள், ஆபரணங்கள் முதலியவற்றை பகவானுக்கு சமர்ப்பிக்க வேண்டும். கண்ணனுக்குப் பூமாலை சார்த்தி நிவேதனம், கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். பிறகு எண்ணெய் தேய்த்துக்கொண்டு, வெந்நீர் கலசத்தை ஒரு பலகையில் வைத்து, மலர்களை சமர்ப்பித்து கைகளைக் கூப்பியபடி கீழ்க்கண்ட சுலோகத் தைக் கூறவேண்டும்.

    "விஷ்ணோ: பாத ப்ரஸூதாஸி வைஷ்ணவீ விஷ்ணு தேவதா

    த்ராஹி நஸ்த்வேனஸஸ் தஸ்மாத் ஆஜன்ம மரணாந்திகாத்

    திஸ்ர: கோட்யோர்த்த கோடீச தீர்த்தானாம் வாயுரப்ரவீத்

    திவி புவ்யந்தரிக்ஷே ச தானிமே ஸந்து ஜாஹ்னவி'.

    இதன் பொருளாவது, "ஹே மாதா! கங்கா தேவி! நீ விஷ்ணுவின் பாதத்தில் தோன்றியதால் வைஷ்ணவியாகவும், விஷ்ணுவை அதிதேவதை யாக உடையவளாகவும் இருக்கிறாய். பிறப்பு முதல் மரணம் வரை உள்ள பாவங்களிலிருந்து எங்களைக் காத்தருள வேண்டும். தேவலோகம், பூமி, அந்தரிக்ஷம் ஆகிய எல்லாவற்றிலுமாக மூன்றரை கோடி புண்ணிய தீர்த்தங்கள் உள்ள தாக வாயு பகவான் கூறியுள்ளார். அவை எல்லாம் தங்கள் கருணையால் எனக்காக இங்கு வந்து அருள வேண்டும்' என்பதாம்.

    மேற்கண்டவாறு பிரார்த்தித்து நீராடிய பிறகு, புத்தாடைகள், ஆபரணங்கள் பூண்டு, லக்ஷ்மி நாராயணனை மலர் களால் அர்ச்சிக்க வேண்டும். பலவகை இனிப்புகள், தின்பண்டங்கள், பழங்கள், தாம்பூலம் முதலியவற்றை நிவேதனம் செய்து கற்பூரம் காட்ட வேண்டும். பகவானையும் பெரியோர்களையும் வணங்கி, வாணவேடிக்கை களாலும் தீபங்களாலும் எங்கும் ஒளிரச் செய்ய வேண்டும். குழந்தைகளை மகிழ்ச்சிப் படுத்த வேண்டும்.

    தீபாவளியை வடஇந்தியாவில் மகாபலி தீபம், நரக சதுர்த்தசி, லக்ஷ்மி குபேர பூஜை என்று மூன்று தினங்கள் கொண்டாடுகிறார்கள்.

    பொதுவாக தர்ம சாஸ்திரத்தில் காலை 8.30 மணிக்கு முன்பும் மாலை 5.00 மணிக்கு மேலும் தைல ஸ்னானம் செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. தைல ஸ்னானத்தை "அப்யங்க ஸ்னானம்' என்றும்; "மலாபகர்ஷ ணம்' என்றும் அழைப்பதுண்டு. ஸ்மிருதிக ளில் ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்வது மனதிற்கு வருத்தத்தையும், திங்கட் கிழமை தேக காந்தியையும், செவ்வாய்க்கிழமை மரணத்தையும், புதன் கிழமை செல்வத்தையும், வியாழக்கிழமை உடல் நலத்தையும், வெள்ளிக் கிழமை வறுமையையும், சனிக்கிழமை விரும்பி யவற்றில் லாபத்தையும் அளிக்கும் என்று கூறப் படுகிறது. ஆனால் பெண்களுக்கு செவ்வாயும், வெள்ளியுமே உகந்ததாகக் கருதப்படுகின்றன.

    தைல ஸ்னானத்துக்கு ஷஷ்டி, ஏகாதசி, துவாதசி, சதுர்த்தசி, அஷ்டமி, பிரதமை, பௌர்ணமி, அமாவாசை முதலிய திதிகளும்; உத்திரம், கேட்டை, திருவோணம், திருவா திரை முதலிய நட்சத்திரங்களும் உகந்தவை அல்ல என்று தவிர்க்கப்பட்டுள்ளன. இவ்வி தம் விலக்கப்பட்ட திதி, வாரம், நட்சத்திரங்க ளில் எண்ணெய் நீராட நேரிட்டால் சிறிது நெய்யைக் கலந்து தேய்த்துக் கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமை செய்ய நேரிட் டால் எண்ணெய்யுடன் புஷ்பத்தையும், வெள்ளிக்கிழமை செய்தால் கோமூத்திரத்தை யும், செவ்வாய்க்கிழமை சிறிது மண்ணையும் கலந்த நீராட வேண்டும் என்று பரிகாரமும் கூறப்பட்டுள்ளது. வியாழக்கிழமை எண் ணெயுடன் அருகம்புல்லைச் சேர்த்து நீராடுவது நலம் தரும்.

    ஆனால் பொதுவாக சதுர்த்தசியில் எண்ணெய் நீராடுவது கூடாது என்பது தீபாவளிக்குப் பொருந்தாது. ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் அமாவாசைக்கு முதல் தினம் விடியற்காலையில் நல்லெண் ணெய் தேய்த்துக்கொண்டு வெந்நீரில் நீராடுவது கட்டாயமாகச் செய்ய வேண்டிய கடமை யாகக் கூறப்படுகிறது. இவ்விதம் செய்யா விட்டால் நரகத்தை அளிக்க வல்ல பாபம் வந்து சேரும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

    "யஸ்யாம் ஹதச் சதுர்தச்யாம் நரகோ விஷ்ணுநா நிசி

    தஸ்யாமப் யஞ்ஜனம் கார்யம் நரைர் நரக் பீருபி:'

    என்னும் சுலோகம் இதனை விளக்குகிறது.

    தவிர இந்த நரக சதுர்த்தசியன்று உஷத் காலத்தில் சூரியன், சந்திரன் இருவரும் பெரும்பாலும் சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இது மிகவும் புனிதமான தினம் என்றும்; இந்த நன்னாளில் எண்ணெய் நீராடல், லக்ஷ்மி பூஜை, புத்தாடை உடுத்தல் முதலிய சுபகாரியங்களை அவசியம் செய்யும் படியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனை விஷ்ணு புராணம்,

    "ஸ்வாதி ஸ்திதே ரவாவிந்துர் யதிஸ்துôதி கதோ பவேத்

    பஞ்சத்வ குதகஸ்தாயீ க்ருதாப்யங்க விதிர் நர:'

    என்று கூறுகிறது.

    தீபங்களாலும், வாண வேடிக்கைகளாலும் பல தீபங்களை ஏற்றி லக்ஷ்மி தேவிக்கு விசேஷ நீராஜனம் செய்தால் ஐஸ்வர்யத்தை நிரம்பப் பெற்று வாழலாம் என்பதை,

    "நீராஜிதோ மஹாலக்ஷ்மீ மர்ச்சயன் ச்ரியமச்னுதே

    தீபைர் நீராஜிதா யத்ர தீபாவளிரிதி ஸ்ம்ருதா'

    என்ற வரிகள் தெளிவாக்குகின்றன.

    மேலும் தீபாவளியில் எண்ணெய்யில் லக்ஷ்மி தேவியும், நீரில் கங்காதேவியும் வசிக்கி றார்கள் என்பதை,

    "தைலே லக்ஷ்மீர் ஜலேகங்கா தீபாவளிதினே வஸேத்'

    என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இத்த கைய தீபாவளி தினத்தில் ஸ்ரீலக்ஷ்மி நாராயணனை வழிபட்டு பண்டிகையை மங்களகரமாக அனுஷ்டித்தால் எல்லா நலமும் பெறுவோம் என்பது திண்ணம்.

    "கங்காதீர்த்தே மலின மனஸ:

    பாதகம் க்ஷாலயந்தி'

    என்றபடி, சிவதியானத்தில் எப்போதும் ஈடுபட்ட மனத்தினளும், தாயுமானவளுமான கங்காதேவியானவள், இத்தீபாவளித் திரு நாளில் நம் அனைவரது இல்லங்களிலும் எழுந்தருளி நமது மூவினைகளையும் அழித் துப் பன்னலங்களையும் அருளப் பிரார்த்திப் போமாக.

    "கங்காதேவி நமஸ்துப்யம் சிவ சூட விராசிதே

    சரண்யே ஸர்வ பூதானாம் த்ராஹிமாம் சரணாகதம்'


    Valliyur Srinivasan
    Source:http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=43
Working...
X