4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 030/116 சீராம விண்ணகரம் சேர் ! மீளாத விண்ணகரம் உண்டு !

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsதிருப்பதி - 24/108. சோழ நாடு - 24/40 : திருச் சீராம விண்ணகரம்

செல்லும் தொறும் உயிர்ப் பின் செல்லும் இரு வினையை
வெல்லும் உபாயம் விரும்புவீர் ! தொல் அரங்கர்
சீராம விண்ணகரம் சேர்மின்; பின் மீளாத
ஊராம் அவ்விண்ணகரம் உண்டு

பதவுரை :

செல்லும் தொறும் உடலை விட்டு உயிர் பிரியும்போது
உயிர்ப் பின் செல்லும் அந்த உயிரைத் தொடர்ந்து செல்லும்
இரு வினையை நல்வினை , தீவினை ஆகிய இரண்டையும்
வெல்லும் உபாயம் விரும்புவீர் ! தாண்டுவதற்கு வழியை விரும்புபவர்களே !
தொல் அரங்கர் பழைய திரு அரங்க நாதனுடைய
சீராம விண்ணகரம் சேர்மின்; சீராம விண்ணகரத்தைப போய்ச் சேருங்கள்
பின் மீளாத ஊராம் சேர்ந்தபின் ,திரும்பி வர முடியாத
அவ்விண்ணகரம் உண்டு வைகுண்டத்தை அடையலாம்
--
V
.Sridhar