Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 030/116 சீராம வி&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 030/116 சீராம வி&#

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 030/116 சீராம விண்ணகரம் சேர் ! மீளாத விண்ணகரம் உண்டு !

    திருப்பதி - 24/108. சோழ நாடு - 24/40 : திருச் சீராம விண்ணகரம்

    செல்லும் தொறும் உயிர்ப் பின் செல்லும் இரு வினையை
    வெல்லும் உபாயம் விரும்புவீர் ! தொல் அரங்கர்
    சீராம விண்ணகரம் சேர்மின்; பின் மீளாத
    ஊராம் அவ்விண்ணகரம் உண்டு

    பதவுரை :

    செல்லும் தொறும் உடலை விட்டு உயிர் பிரியும்போது
    உயிர்ப் பின் செல்லும் அந்த உயிரைத் தொடர்ந்து செல்லும்
    இரு வினையை நல்வினை , தீவினை ஆகிய இரண்டையும்
    வெல்லும் உபாயம் விரும்புவீர் ! தாண்டுவதற்கு வழியை விரும்புபவர்களே !
    தொல் அரங்கர் பழைய திரு அரங்க நாதனுடைய
    சீராம விண்ணகரம் சேர்மின்; சீராம விண்ணகரத்தைப போய்ச் சேருங்கள்
    பின் மீளாத ஊராம் சேர்ந்தபின் ,திரும்பி வர முடியாத
    அவ்விண்ணகரம் உண்டு வைகுண்டத்தை அடையலாம்








    --
    V
    .Sridhar
Working...
X