4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 031/116 கூடலூராய் உன் தொண்டனேன் !திருப்பதி - 25/108. சோழ நாடு - 25/40 : திருக் கூடலூர்


உண்டு, கேட்டு , உற்று , மோந்துப் பார்க்கும் ஐவர்க்கே
தொண்டு படலாமோ உன் தொண்டனேன் ? - விண்டு இலங்கும்
ஆடல் ஊர் நேமி முதல் ஐம்படையாய் !அன்பு உடையாய் !
கூடலூராய் -இதனைக் கூறு


பதவுரை :


விண்டு இலங்கும் விட்டு விட்டு ஒளி வீசும்
ஆடல் ஊர் வெற்றி பொருந்திய
நேமி முதல் ஐம்படையாய் ! சக்கரம் முதலிய ஐந்து ஆயுதங்களை உடையவனே !
அன்பு உடையாய் ! கருணை உள்ளவனே !
கூடலூராய் திருக் கூடலூரில் இருப்பவனே !
உன் தொண்டனேன் உனக்கே அடியவனான நான்
உண்டு, இனிய உணவுகளைச் சுவைத்தும் ,
கேட்டு , இனிய இசை முதலியவற்றைக் கேட்டும் ,
உற்று , இனிய பொருட்களைத் தொட்டும் ,
மோந்து நறு மணமுள்ள பொருட்களை முகர்ந்தும் ,
பார்க்கும் ஐவர்க்கே நற்காட்சிகளைப் பார்த்தும் மகிழ்கின்ற ஐம்புலன்களுக்கே
தொண்டு படலாமோ அடிமைப் படலாமோ ?
இதனைக் கூறு பதில் சொல்வாய் !
--
V.Sridhar


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends