4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 032/116 கண்ணங்குடியான் கருத்து தேறுகிலேன் !Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsதிருப்பதி - 26/108. சோழ நாடு - 26/40 : திருக் கண்ணன் குடி


கூறு புகழ்த் தன அடிக்கே கூட்டுவனோ இன்னம் எனை
வேறுபடு பல் பிறப்பில் வாழ்த்துவனோ - தேறுகிலேன்
எண்ணம் குடியாய் இருந்தான் , நின்றான் , கிடந்தான் ,
கண்ணங்குடியான் கருத்து


பதவுரை :


எண்ணம் குடியாய் என் மனத்தில் குடி இருந்து கொண்டு அங்கே
இருந்தான் , நின்றான் வீற்றிருப்பதையும் , நிற்பதையும்
கிடந்தான் சயனிப்பதையும் செய்பவனும்

கண்ணங்குடியான திருக் கண்ணன்ங்குடியில் இருப்பவனுமான எம்பெருமான்
கூறு புகழ்த் தன அடிக்கே வேதங்களால் புகழப்படும் தன திருவடிகளில்
கூட்டுவனோ என்னைச் சேர்த்துக் கொள்வானோ ?
இன்னம் எனை அல்லது மீண்டும் என்னை
வேறுபடு பல் பிறப்பில் பல் வேறு பிறப்புகளில் தள்ளி
வீழ்த்துவனோ வருத்துவானோ ?
கருத்து தேறுகிலேன் எம்பெருமான் திரு உள்ளம் அறியேன்--
V.Sridhar