Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 033/116 கண்ணமங்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 033/116 கண்ணமங்&#

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 033/116 கண்ணமங்கை , ஊர் என்று காண் !

    திருப்பதி - 27/108. சோழ நாடு - 27/40 : திருக்கண்ண மங்கை

    கருத்தினால் , வாக்கினால் , நான் மறையும் காணா
    ஒருத்தனை , நீ நெஞ்சே ! உணரில் - பெருத்த முகில் ,
    வண்ணம் ; அம் கை , கண் , கால் , வனசம் ; திரு அரங்கம் ,
    கண்ணமங்கை , ஊர் என்று காண்

    பதவுரை :

    நெஞ்சே என் மனமே !
    கருத்தினால் , வாக்கினால் மனத்தினாலும் , சொல்லாலும்
    நான் மறையும் காணா ஒருத்தனை நான்கு வேதங்களும் கண்டு அறிய முடியாத
    ஒருத்தனை நீ உணரில் ஒப்பற்ற திருமாலை நீ அறிய விரும்பினால்
    வண்ணம் பெருத்த முகில் அவன் மேனி கார் மேகம் போன்றது
    அம் கை , கண் , கால் , வனசம் அழகிய கண்களும் , கால்களும் தாமரை மலர்கள்
    ஊர் திரு அரங்கம் கண்ணமங்கை இருப்பிடம் திரு அரங்கமும் , திருக்கண்ண ங்கையும்
    என்று காண் என்று அறிவாயாக !






    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 03-11-13, 12:28.
Working...
X