4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 038/116 அரிமேய விண்ணகரத்தார்க்கு அடியார் நம் அளவோ ?

திருப்பதி - 32/108. சோழ நாடு - 32/40 : திரு அரிமேய விண்ணகரம்

வாழும் அடியார், மட நெஞ்சே ! நம் அளவோ ?
தாழும் சடையோன் , சது முகத்தோன் , - பாழிக்-
கரிமேய விண்ணகரக் காவலோன் , கண்டாய் -
அரிமேய விண்ணகரத்தார்க்கு

பதவுரை :

மட நெஞ்சே அறியாமை உடைய என் மனமே !
அரிமேய விண்ணகரத்தார்க்கு திரு அரிமேய விண்ணகரத்தில் இருக்கும் திருமாலுக்கு
வாழும் அடியார் நம் அளவோ பக்தர்களாக வாழ்பவர்கள் நாம் மட்டுமா ?
தாழும் சடையோன் , சது முகத்தோன் தொங்கு சடை உள்ள சிவனும் , நான் முகனும்
பாழிக்கரி மேய பலம் கொண்ட ஐராவதம் எனும் யானை மீது ஏறி வரும்
விண்ணகரக் காவலோன் தேவலோக அரசனான இந்திரனும் அடியவர்கள் ஆவார்
கண்டாய் அறிந்து கொள்

--
V.Sridhar


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends