Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 038/116 அரிமேய வ&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 038/116 அரிமேய வ&#

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 038/116 அரிமேய விண்ணகரத்தார்க்கு அடியார் நம் அளவோ ?

    திருப்பதி - 32/108. சோழ நாடு - 32/40 : திரு அரிமேய விண்ணகரம்

    வாழும் அடியார், மட நெஞ்சே ! நம் அளவோ ?
    தாழும் சடையோன் , சது முகத்தோன் , - பாழிக்-
    கரிமேய விண்ணகரக் காவலோன் , கண்டாய் -
    அரிமேய விண்ணகரத்தார்க்கு

    பதவுரை :

    மட நெஞ்சே அறியாமை உடைய என் மனமே !
    அரிமேய விண்ணகரத்தார்க்கு திரு அரிமேய விண்ணகரத்தில் இருக்கும் திருமாலுக்கு
    வாழும் அடியார் நம் அளவோ பக்தர்களாக வாழ்பவர்கள் நாம் மட்டுமா ?
    தாழும் சடையோன் , சது முகத்தோன் தொங்கு சடை உள்ள சிவனும் , நான் முகனும்
    பாழிக்கரி மேய பலம் கொண்ட ஐராவதம் எனும் யானை மீது ஏறி வரும்
    விண்ணகரக் காவலோன் தேவலோக அரசனான இந்திரனும் அடியவர்கள் ஆவார்
    கண்டாய் அறிந்து கொள்





    --
    V.Sridhar
Working...
X