4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 040/116 புருடோத்தமன் தன் ஊர் வண் புருடோத்தமம் ஆம்


திருப்பதி - 34/108. சோழ நாடு - 34/40 : திரு வண் புருடோத்தமம்


சாய்ந்த திரு அரங்கம் , தண் வேங்கடம் , குடந்தை
ஏய்ந்த திரு மாலிருஞ்சோலை - பூந்துவரை
வண் புருடோத்தமம் ஆம் - வானவர்க்கும் வானவன் ஆம்
ஒண் புருடோத்தமன் தன் ஊர்


பதவுரை :


வானவர்க்கும் வானவன் ஆம் தேவர்களுக்கு எல்லாம் தேவன் ஆகிய

ஒண் புருடோத்தமன் தன் ஊர் அழகிய புருடோத்தமனின் திருப்பதிகள் ஆவன :

சாய்ந்த திரு அரங்கம் பள்ளி கொண்டிருக்கும் திரு அரங்கம் ,

தண் வேங்கடம் குளிர்ந்த திரு வேங்கட மலை ,

குடந்தை திருக் குடந்தை ,

ஏய்ந்த திரு மாலிருஞ்சோலை விருப்பமான திரு மாலிருஞ்சோலை ,

பூந்துவரை அழகிய துவாரகை ,

வண் புருடோத்தமம் ஆம் திரு வண் புருடோத்தமம் ஆகியவை ஆகும்

--
V.Sridhar


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends