Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 040/116 புருடோத

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 040/116 புருடோத

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 040/116 புருடோத்தமன் தன் ஊர் வண் புருடோத்தமம் ஆம்


    திருப்பதி - 34/108. சோழ நாடு - 34/40 : திரு வண் புருடோத்தமம்


    சாய்ந்த திரு அரங்கம் , தண் வேங்கடம் , குடந்தை
    ஏய்ந்த திரு மாலிருஞ்சோலை - பூந்துவரை
    வண் புருடோத்தமம் ஆம் - வானவர்க்கும் வானவன் ஆம்
    ஒண் புருடோத்தமன் தன் ஊர்


    பதவுரை :


    வானவர்க்கும் வானவன் ஆம் தேவர்களுக்கு எல்லாம் தேவன் ஆகிய

    ஒண் புருடோத்தமன் தன் ஊர் அழகிய புருடோத்தமனின் திருப்பதிகள் ஆவன :

    சாய்ந்த திரு அரங்கம் பள்ளி கொண்டிருக்கும் திரு அரங்கம் ,

    தண் வேங்கடம் குளிர்ந்த திரு வேங்கட மலை ,

    குடந்தை திருக் குடந்தை ,

    ஏய்ந்த திரு மாலிருஞ்சோலை விருப்பமான திரு மாலிருஞ்சோலை ,

    பூந்துவரை அழகிய துவாரகை ,

    வண் புருடோத்தமம் ஆம் திரு வண் புருடோத்தமம் ஆகியவை ஆகும்

    --
    V.Sridhar
Working...
X