4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 042/116 என் நெஞ்சே !திருத் தெற்றியம்பலத்தைச் சேர் !

திருப்பதி - 36/108. சோழ நாடு - 36/40 : திருத்தெற்றியம்பலம்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsசென்றது காலம் , திரை , நரை , மூப்பு ஆன ; இனி
என்று கொல் சாவு ? அறியேன் ; என் நெஞ்சே - கன்றால்
உருத்து எற்றி அம்பலத்தை ஓர் விளவின் வீழ்த்தான்
திருத் தெற்றியம்பலத்தைச் சேர்

பதவுரை :

என் நெஞ்சே எனது மனமே !
சென்றது காலம் வாழ்நாள் பெரும் பகுதி கழிந்தது
திரை , நரை , மூப்பு ஆன தோல் சுருக்கமும் , முடி வெளுத்தலும் . கிழத்தனமும் வந்து விட்டது
இனி என்று கொல் சாவு ? அறியேன் இனி மரணம் என்றைக்கோ ? அறிய மாட்டேன்
ஓர் விளவின் அம் பலத்தை ஒரு விளாமரத்தின் அழகிய பழத்தை (அசுரனை)
கன்றால் உருத்து எற்றி கன்றை (அசுரனை) வீசி எறிந்து
வீ ழ்த்தான்விழச்செய்த திருமாலின்
திருத் தெற்றியம்பலத்தைச் சேர்திருத் தெற்றியம்பலத்தை அடைவாயாக


V.Sridhar