4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 043/116 திரு மணிக்கூடத்தானைச் செப்பு !

திருப்பதி - 37/108. சோழ நாடு - 37/40 : திரு மணிக் கூடம்

சேராது முன் செய்த தீவினை ; பின் செய்ததுவும்
வாராது இனி ; நீ - மட நெஞ்சே ! - நேராக்-
குரு மணிக் கூடத்து ஆனைக் கொம்பு பறித்தானை ,
திரு மணிக்கூடத்தானைச் செப்பு

பதவுரை :

மட நெஞ்சே அறியாமை உடைய என் மனமே !
நேரா குரு மணிக் கூடத்து எதிர்த்து , இரத்தினங்கள் இழைக்கப்பட்ட
ஆனைக் கொம்புகுவலயாபீடம் எனும் யானையின் தந்தங்களை
பறித்தானை பிடுங்கி யானையை அழித்தவனும் ,
திரு மணிக்கூடத்தானை நீ செப்பு திரு மணிக் கூடத்தில் இருக்கும் திருமாலை வணங்கு
முன் செய்த தீவினை சேராது பழைய பாவமும் அணுகாது
பின் செய்ததுவும் இனி வாராதுஇனி அறியாமல் செய்யும் பாவமும் உன்னை அணுகாது
--

V.SridharDear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends