Announcement

Collapse
No announcement yet.

இன்று அனுஷம் 05-11-2013 தெரிந்த ஒரு மறுபதிவு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இன்று அனுஷம் 05-11-2013 தெரிந்த ஒரு மறுபதிவு

    இன்று அனுஷம் 05-11-2013
    தெரிந்த ஒரு மறுபதிவு

    விழுப்புரத்தில் ஜய வருடம்,வைகாசி மாதம் 8 ஆம் நாள்,அனுஷம் நட்சத்திரத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரி என்ற வேத விற்பன்னருக்கும்,ஸ்ரீமஹாலட்சுமி அம்மாளுக்கும் புதல்வனாக அவதரித்தவர் காஞ்சி பரமாச்சாரியார்.
    ... இவர் காஞ்சி காமகோடி பீடாதிபதியாக பிலவங்க வருடம்,சித்திரை மாதம் 27 ஆம் நாள் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு,8.4.1994 அன்று முக்தியடைந்தார்.இன்றும் இந்துக்களாகிய நம் அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கிறார்.

    பெரியவர் ஒரு முறை சம்ஸ்க்ருத கல்லூரியிலிருந்து மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார்.லஸ் கார்னரில் இவருக்கு கருப்புக்கொடி காட்டி பழிப்பதற்கென்று நாத்திகக் கூட்டம் கூடியிருந்தது.

    (அந்த கூட்டத்துக்குத் தெரியாது:காஞ்சிப்பெரியவர் தான் தமிழ் பண்பாடுதான் இந்துப்பண்பாடு என்பதைக் கண்டறிந்தார் என்று! தமிழினத்தின் ஆன்மீக அப்பா காஞ்சிப்பெரியவர் தான் என்பது தெரியாது)

    பெரியவருக்கு எதிரே வந்து கறுப்புக்கொடியை உயர்த்தி, ‘ஒழிக,ஒழிக சங்கராச்சாரியார் ஒழிக’ என்று அக்கும்பல் கோஷமிட்டது.அதைக் கேட்டுக்கொண்டே வந்த பெரியவர் நகரவில்லை;அவர் ஓடிவிடுவாரென எதிர்பார்த்த கும்பல் கத்தி கத்தி களைத்து ஓய்ந்தது.அதற்கென்றே காத்திருந்தவர் போல,அவர்களை அருகில் வரச் சொன்னார்.கும்பலுக்கு உள்ளூர பயம் வந்துவிட்டது.
    அவர் மகிமை அவர்களுக்கும் தெரியும்.ஆதலால் ஏதேனும் சபித்துவிடுவாரோ என்ற பயம்தான்.அதை தெரிந்துகொண்டு, “பயப்படாமல் அவர்களை வரச் சொல்லு” என்று மறுபடியும் சொன்னார்.எல்லோரும் அருகில் வந்தவுடன் இரு கைகளையும் தூக்கி, “நீங்க எல்லோரும் க்ஷேமமாக இருக்கணும்” என்று ஆசிர்வதித்தார்
Working...
X