Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 047/116 திரு மால&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 047/116 திரு மால&#

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 047/116 திரு மாலிருஞ்சோலை சேர்ந்தேன் ! வான் வரும் !

    திருப்பதி - 41/108. பாண்டிய நாடு - 01/18 : திரு மாலிருஞ்சோலை

    பணிந்தேன் திருமாலை ; பாமாலை தாளில்
    அணிந்தேன் ; அருள் தஞ்சமாகத் துணிந்தேன் ;
    திரு மாலிருஞ்சோலை சேர்ந்தேன் ; எனக்கு
    வருமால் ; இருஞ்சோதி வான் .

    பதவுரை :

    திரு மாலிருஞ்சோலை சேர்ந்தேன் நான் திரு மாலிருஞ்சோலையை அடைந்தேன் .
    பணிந்தேன் திருமாலை அங்குள்ள அழகர் பிரானை வணங்கினேன் .
    பாமாலை தாளில் அணிந்தேன் அவர் திருவடிகளில் தமிழ்ப் படல்களைச் சூட்டினேன்
    அருள் தஞ்சமாகத் துணிந்தேன் அவர் அருளையே பற்றுக்கோடாக நிச்சயித்தேன்
    எனக்கு இருஞ்சோதி வான் வரும் எனக்கு ஒளி வடிவமான வைகுண்டம் கிடைக்கும்



    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 06-11-13, 19:59.
Working...
X