4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 052/116 மாயன் திரு மோகூர் வாய் இன்று சேருமோ ?

திருப்பதி - 46/108. பாண்டிய நாடு - 06/18 : திரு மோகூர்

வாயால் மலர் கோதி வாவி தொறும் மேயுமோ ?
மேயாமல் அப்பாமல் விரையுமோ ? - மாயன்
திரு மோகூர் வாய் இன்று சேருமோ ? நாளை
வருமோ ? - கூர் வாய் அன்னம் வாழ்ந்து

பதவுரை :

கூர் வாய் அன்னம் கூர்மையான வாய் உள்ள நான் தூது விட்ட அன்னம்
வாயால் மலர் கோதி தன வாயால் தாமரை மலரைக் கோதிக்கொண்டு
வாவி தொறும் மேயுமோ தடாகங்கள் தோறும் மேய்ந்து கொண்டு இருக்குமோ ?
வாழ்ந்து மேயாமல் அப்படி இருந்து விட்டு பின்னர் மேய்வதை விட்டு
அப்பாமல் விரையுமோ அப்புறம் விரைந்து செல்லுமோ ?
மாயன் திரு மோகூர் வாய் மாயனான திரு மோகூருக்கு
இன்று சேருமோ இன்றைக்குப் போய்ச் சேருமோ ?
நாளை வருமோ நாளைக்கே திரும்பி வருமோ ?
Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends