4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 053/116 கூடல் அழகா ! நின் குறிப்பு உரையாய் !


திருப்பதி - 47/108. பாண்டிய நாடு - 07/18 : திருக் கூடல்


வாழ்விப்பான் எண்ணமோ ? வல்வினையில் இன்னம் எனை
ஆழ்விப்பான் எண்ணமோ ? அஃது உரையாய் - தாழ்வு இலாப்
பாடல் அழகு ஆர் புதுவைப் பட்டர் பிரான் கொண்டாடும்
கூடல் அழகா ! நின் குறிப்பு


பதவுரை :


தாழ்வு இலாப் பாடல் அழகு ஆர் இழிவு இல்லாத பாசுரங்களின் அழகு உடைய
புதுவைப் பட்டர் பிரான் ஸ்ரீ வில்லிபுத்தூரில் அவதரித்த பெரியாழ்வார்
கொண்டாடும் கூடல் அழகா புகழ்ந்து பாடிய திருக்கூடலில் இருக்கும் அழகனே !
வாழ்விப்பான் எண்ணமோ ? அடியேனை வாழ்விக்கத் திருவுள்ளமோ ?
இன்னம் வல்வினையில் இன்னமும் கொடிய இரு வினைகளில்
எனை ஆழ்விப்பான் எண்ணமோ ? அழுந்தச் செய்யும்படி திருவுள்ளமோ ?
நின் குறிப்பு அஃது உரையாய் உனது கருத்து என்ன ? அதைத் தெரிவிப்பாயாக !
--
V.Sridhar
Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends