4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 054/116 பிறப்பு இலி வாழ் வில்லி புத்தூர் வளம் கொண்டாடு !

திருப்பதி - 48/108. பாண்டிய நாடு - 08/18 : ஸ்ரீ வில்லிபுத்தூர்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsகுறித்து ஒருவர் கொண்டாடும் கொள்கைத்தோ , கோதை
நிறத்த ஊர் , விண்டு சித்தர் நீடு ஊர் - பிறப்பு இலி ஊர் ,
"தாழ்வு இல்லி புத்தூர் " என்று ஐவர்க்குத தான் இரந்தான் ,
வாழ் வில்லி புத்தூர் வளம் ?

பதவுரை :

கோதை நிறத்த ஊர் ஆண்டாளால் பெருமை பெற்ற ஊரும் ,
விண்டு சித்தர் நீடு ஊர் பெரியாழ்வார் வாழ்ந்த ஊரும் ,
பிறப்பு இலி ஜனனம் இல்லாதவனும் ,
தாழ்வு இல்லி "தாழ்வு இல்லாத துரியோதனனே !
புத்தூர் புதிய ஊர்களைக் கொடு "
என்று ஐவர்க்குத தான் இரந்தான் என்று பஞ்ச பாண்டவர்களுக்காக கேட்டவனுமான
வாழ் ஊர் வில்லி புத்தூர் வளம் திருமால் இருக்கும் வில்லி புத்தூரின் செழிப்பானது
ஒருவர் குறித்து ஒருவரால் நினைத்து
கொண்டாடும் கொள்கைத்தோ பாராட்டும் தன்மை உடையதோ ?

--
V.Sridhar