4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 056/116 எம்பிராற்கு தொலைவில்லிமங்கலம் ஊர் !

திருப்பதி - 50/108. பாண்டிய நாடு - 10/18 : திருத் தொலைவில்லி மங்கலம்

வாயும் மனைவியர் பூ மங்கையர்கள் எம்பிராற்கு
ஆயுதங்கள் , ஆழி முதல் ஐம்படைகள் - தூய
தொலைவில்லிமங்கலம் ஊர் ; தோள், புருவம், மேனி ;
மலை,வில், இமம் கலந்த வான் .

எம்பிராற்கு எமது ஸ்வாமிக்கு
வாயும் மனைவியர் வாய்த்த தேவிமார்கள்
பூ மங்கையர்கள் தாமரை மலரில் இருக்கும் ஸ்ரீ தேவியும் , பூ தேவியும் ;
ஆயுதங்கள் படைக் கலங்கள்
ஆழி முதல் ஐம்படைகள் சக்கரம் முதலிய பஞ்சாயுதங்கள்
ஊர் தூய தொலைவில்லிமங்கலம் தலம் தூய்மையான தொலைவில்லிமங்கலம்
தோள் மலை தோள்கள் மலை போன்றவை
புருவம் வில் புருவம் வில் போன்றவை
மேனி இமம் கலந்த வான் திருமேனி நிறம் குளிர்ந்த வானம் போன்றது


--
V.Sridhar


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends