பெருங்காயம்

Click image for larger version. 

Name:	Perungayam 1.jpg 
Views:	10 
Size:	4.9 KB 
ID:	1505Click image for larger version. 

Name:	Perungayam 2.jpg 
Views:	11 
Size:	18.4 KB 
ID:	1506Click image for larger version. 

Name:	Perungayam 3.jpg 
Views:	11 
Size:	6.5 KB 
ID:	1507


பெருங்காயம் (பெருலா அசபோய்டிடா) (பாரரசீகம் انگدان அங்கேடன்), மாற்றுவிதமாக அசபேடிடா, (இது சாத்தானின் சாணம், நாற்றமடிக்கும் பசை, அசந்த், கடவுளின் உணவு, காயம் (மலையாளம்), இங்கு (பெங்காலி, மராத்தி, குசராத்தி, இந்தி, உருது, நேபாளி), இன்குயா (தெலுங்கு), இன்கு (கன்னடம்), பெருங்காயம் (தமிழ்), ஐடிட்டு (மிசுனாய்க்கு எபிரேயம்), மற்றும் சியண்ட்டு பென்னல் என்றும் அறியப்படுகின்றது),

இது பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்ட பெருங்காய இனம் ஆகும்.

ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தான் பெருங்காயச்செடி வளருகிறது.

பெருங்காயம் ஃபெருலா ஃபொட்டிடா (Ferula foetida) அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து வருகிறது.

இந்த செடியின் வேர் மிக அகலமாக இருக்கும்.

இலைகலோ மூலத்துவம் வாய்ந்ததாக இருக்கும் (Radical). அதாவது, ஒரே இடத்திலிருந்து இலைகள் ஆரம்பிக்கும்.

இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக நாற்றமுள்ள பால் இருக்கும்.

அழகான மஞ்சள் நிறமுள்ள மலர்களைக் கொண்டது.

செடியின் பாலிருந்துதான் பெருங்காயம் கிடைக்கிறது.

வரலாறு:

டிபேட் மற்றும் பெர்ஷியா நாடுகளில் இது முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது.

இது வட இந்தியாவில் ஹிங்காரா (அ) ஹிங் என்று என்று அழைக்கப்படுகிறது.

பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக்கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கின்றது.

நம்ம தமிழ்நாட்டில் ரசத்தையும், சாம்பாரையும் கமகமக்க வைக்கிற பெருமை பெருங்காயத்தை தான் சேரும்.

இதை, கடவுளர்களின் மருந்து என்று குறிப்பிடுகிறார்கள்.
பச்சையாக இருக்கும் போது சகிக்க முடியாது இதனுடைய வாசனை சமையலில் சேர்த்த பிறகு ஆளை அசத்தும்.

சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம்.

பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இதில் இரண்டு வகை இருக்கிறது.

காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம் சுவை நரம்புகளைத் தூண்டி, ருசியை உண்டாக்கும் குணம் கொண்டது.

தானும் எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும்.

வாயுக்கோளாறை விரைவிலேயே சரி செய்யும் மருந்து இது. தசைகளுக்கு பலம் கொடுக்கும்,

சீறுநீரோட அளவைப் பெருக்கும் என்று ஏகப்பட்ட மருத்துவக் குணங்கள் இருக்கிறது.

தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் வராது.

மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது

எல்லோருக்கும் தெரிந்தது போல, பெருங்காயம் வாயுக்கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது.

நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும் ஹிஸ்டீரியா (Hysteria) மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது.

வயற்றுக் கோளாறா, கபால்னு கொஞ்சம் பெருங்காயத்தை விழுங்குங்க

இந்த கதம்பப் பொருள் உணவில் சுவையூட்டுப் பொருளாகவும் ஊறுகாய்களிலும் செரிமானத்திற்கு உதவும் பொருளாக பயன்படுகின்றது.

சமைக்காத போது அதன் துர்நாற்றம் கடுமையாக இருப்பதால் அதை காற்றுப்புகா கொள்கலன்களில் அடைத்து வைக்க வேண்டும்;

இல்லையெனில் அந்த மணமானது அருகில் வைக்கப்பட்டுள்ள பிற மசாலாப் பொருட்களிலும் தொற்றிக்கொள்ளும்.

பெருங்குடல் காற்றுநீக்கி

பெருங்காயம் குடலில் உள்ளிருக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைக் குறைக்கின்றது.

வாயுத் தொல்லையைக் குறைக்கின்றது.

மருத்துவப் பயன்பாடுகள்

சளிக்காய்ச்சல் எதிர்ப்பு 1918 ஆம் ஆண்டில் பெருங்காயம் பானிசு இன்புளுயன்சா தொற்று நோயை எதிர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.

தைவான் நாட்டிலுள்ள கயோஹ்சியூங் மருத்துவப் பல்கலைக்கழகத்திலுள்ள விஞ்ஞானிகள், பெருங்காயத்தின் வேர்கள் சுவைன் புளு வைரசுH1N1 ஐ கொல்லும் இயற்கையான வைரஸ் எதிர்ப்பு மருந்து சேர்க்கைகளை உற்பத்தி செய்வதாக அறிக்கை வெளியிட்டனர்.

அமெரிக்க கெமிக்கல் சொசைட்டியின் நேச்சுரல் புராடக்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள் இந்த சேர்மங்கள் இந்த வகையான ப்ளூ காய்ச்சலுக்கு எதிரான புதிய மருந்து உருவாக்கத்திற்காக உறுதியளிக்கும் முன்னணி சேர்மங்களாகப் பயன்படுத்தப்படலாம் என்று கூறினர்.

செரிமானம் -

தாய்லாந்து மற்றும் இந்தியா ஆகியவற்றில் இது செரிமான ஊக்கியாகப் பயன்படுகின்றது மற்றும் இது மஹாஹிங் என்று அறியப்பட்ட ஆல்கஹால் அல்லது நீர் டிஞ்சரில் வயிற்றின் மீது பூசப்படுகின்றது.

ஆசுத்துமா மற்றும் மூச்சுக் குழாய் அழற்சி இது ஆசுத்துமா மற்றும் மூச்சுக் குழாய் அழற்சி ஏற்படும் சமயங்களில் உதவிகரமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

குழந்தைகளின் சளிக்கான சுற்றூர்ப்புற மரபுத் தீர்வு:
இது நெடியுடைய பசையாகக் கலக்கப்பட்டு ஒரு பையில் அல்லற்படும் குழந்தையின் கழுத்தினைச் சுற்றிலும் தொங்கவிடப்படுகின்றது.

நுண்ணுயிர்க் கொல்லி -

பெருங்காயம் நாள்பட்ட மூச்சுக் குழாய் அழற்சி மற்றும் கக்குவானிருமல் ஆகியவற்றுக்கான சிகிச்சையில் பயன்படுத்துவதற்காக நன்கு ஆவணமாக்கப்பட்டதுடன் பாரம்பரிய மருந்துகளில் நுண்ணுயிர்கொல்லியாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது.

அதே போன்று வாயுத் தொல்லையைக் குறைக்கின்றது.

கருத்தடைப் பொருள்/கரு சிதைப்பான் பெருங்காயம் கருத்தடைப் பொருள்/கரு சிதைப்பான் நடவடிக்கையைக் கொண்டிருப்பதாகவும் அறிக்கையிடப்படுகின்றது,

மேலும் அது பண்டைய பெருங்காய மசாலா இனங்கள் சில்பியம் ஆகியவற்றுக்குத் தொடர்புடையதாகவும் (அவற்றிற்கு கீழ்புற பதிலீடாகவும்) உள்ளது.

முயலகனடக்கி -

பெருங்காயம் எண்ணைய்-பசை பாரம்பரிய யூனானி அதே போன்று எத்னோபொட்டானிக்கல் இலக்கியத்தில் முயலகனடக்கியாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

வாட்டாவை சமன்படுத்துதல் -

ஆயுர்வேதத்தில், பெருங்காயம் வட்டா தோஷாவை சமன்படுத்துதற்கான சிறந்த மசாலாப் பொருட்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்:-

பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.

பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது ; உணவை செரிப்பிக்கிறது ; சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது ; பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும்.

உபயோகங்கள் :

இது ஒரு நல்ல வாய்வகற்றி ; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது. இது, வழக்கமான அதாவது எப்போதும் உள்ள இருமலுக்கு கோழையகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும்,

நீரேற்றத்தையும் - சவ்வுகளின் வீக்கத்தையும், காசத்தையும் நீக்குகிறது. சுவாச நோயில் இசிவகற்றியாகவும், வயிற்றில் ஏற்படும் பாதிப்புகட்கும், குடற் கிருமிகளை வெளிப்படுத்தவும் பயனுடையதாகிறது.

இது, குடலின் உப்புதலை குறைக்கிறது. இதன் சிறப்புச் செய்கையினால் வலி உள்ள மாத விடாயின்போது தீட்டை அதிகமாக்குவதற்காகக் கொடுக்கப்படுகிறது.

நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும், வலிப்பு நோயிலும், இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகளிலும் மிகவும் பயனுடையதாகிறது.
பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற கொடுக்கப்படுகிறது. இதை ( பெருங்காயத்தை ) எண்ணெயில் கரைய வைத்துக் காயங்கட்கு மேலே பூசுவதற்கும், காது நோய்களில் பழக்கமான நேர் மருந்தாகக் காது வலியைக் குறைக்க பயன்படுகிறது.

இதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம். பச்சையாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும்.

இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.

பிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம்.

கோழி முட்டை மஞ்சட் கருவுடன் காயத்தைக் கூட்டிக் கொடுக்க வறட்டிருமல், பக்க வலி நீங்கும். எண்ணெயிலிட்டுக் காய்ச்சி காதுக்கிட, காது வலி தீரும்.


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends

Source: Ananthanarayanan Ramaswamy