Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 059/116 பாவைகுந&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 059/116 பாவைகுந&#

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 059/116 பாவைகுந்தம் பண்டு ஒசித்தான் சீவைகுந்தம் பாடும்

    திருப்பதி - 53/108. பாண்டிய நாடு - 13/18 : ஸ்ரீ வைகுந்தம்

    தார் உடுத்துத் தூசு தலைக்கு அணியும் பேதை இவள்
    நேர் உடுத்த சிந்தை நிலை அறியேன் - போர் உடுத்த
    பாவைகுந்தம் பண்டு ஒசித்தான் பச்சைத் துழாய் நாடும்
    சீவைகுந்தம் பாடும் , தெளிந்து

    பதவுரை :

    தார் உடுத்து முடியில் சூட வேண்டிய மாலையை அரையில் அணிந்து கொண்டு ,
    தூசு தலைக்கு அணியும் அரையில் அணிய வேண்டிய ஆடையை முடியில் தரித்து
    பேதை இவள் தெளிந்து அறிவு நிரம்பாத பருவத்தில் உள்ள இவள் தெளிவு கொண்டு
    போர் உடுத்த பாவை போர் புரிய வந்த தாடகை எனும் பெண் எறிந்த
    குந்தம் பண்டு ஒசித்தான் சூலாயுதத்தை ராமாவதாரத்தில் முறித்த திருமாலின்
    பச்சைத் துழாய் நாடும் பசுமையான துழாய் மாலை விரும்புவாள் ;
    சீவைகுந்தம் பாடும் ஸ்ரீ வைகுந்தத்தைப் பற்றி பாடுவாள் ;
    நேர் உடுத்த நேர்மையான இவளது
    சிந்தை நிலை அறியேன் மன நிலை அறிய மாட்டேன்





    --
    V.Sridhar






    --
    V.Sridhar
Working...
X