Announcement

Collapse
No announcement yet.

ஹெல்மெட்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஹெல்மெட்

    ****இந்த பதிவு @[100001046298112:2048:Sampath Kumar] யின் அனுபவம் **** (முன் குறிப்பு) அரசாங்கம் சட்டம் போட்ட காரணத்துக்காகவே ஹெல்மெட் வாங்கிய 2.5 கோடி மக்களில் நானும் ஒருவன்.. வாங்கிய பின் எல்லோர் வீட்டிலும் இருப்பதைப்போலவே என் வீட்டு பீரோ மேல் அழுக்காக ஒட்டடை தூசி படித்து தான் அந்த ஹெல்மெட் இருந்தது2

    2 வருடம் முன்பு 2 வருடம் முன்பு ஒரு நாள் மாலை மணி 7 :- வழக்கம் போல் மிக சோம்பலான ஒரு ஞாயிறு அன்று ஆயாசமாக டீ.வீ இருந்தேன் . என் தொலை பேசி அலறியது .. முப்பது நிமிடம் முன்பு பேசிய நன்பர் தொலைபேசியில் இருந்து .. எடுத்தவுடன் சொல்லுங்க ஆதி அண்ணா என ஆரம்பித்தேன்..


    மறுமுனையில் வேறு குரல்.. "உங்க பேரு என்ன ?? " சம்பத் குமார் .. எங்கே இருக்கீங்க ? இப்போ உங்களால ஜீ.எச் வரைக்கும் வர முடியுமா ? ஏன் சார் .. நீங்க யாரு ?? நான் இண்ஸ்பெக்டர் பேசுறேன்.. ஜீ.எச் சில் இருந்து.. இந்த போனுக்கு சொந்தகாரர் பேரு என்ன ? " சார் ..அவர் பேரு ஆதி நாராயணன் சார் ,, ஏன் அவருக்கு என்ன ஆச்சு ?? " ஒரு சின்ன ஆச்சிடெண்ட் கீழே விழுந்துட்டாரு.. இப்போ மயக்கமாக இருக்காரு .. கடைசியா அவர் உங்ககிட்டா பேசினார் போல.. ? அவர் வீடு எங்கே இருக்கு ? "சார் அவர் வீடு செவ்வாய்பேட்டை தான் சார் .. வீட்டில் அவர் பொண்ணுக்கு பழம் வாங்கிவிட்டு வீட்டுக்கு போறேன்ன்னு என் கிட்டே சொன்னாறு. .அடி பலமா சார் .. ரத்தம் ஏதும் வேணுமா ? " "இல்லேபா சின்ன காயம் தான் ..நீ கொஞ்சம் நேரில் வரமுடியுமா ? அவரச சிகிச்சை பிரிவுக்கு வா ..நான் முன்னாடியே இருப்பேன். அவர் வீடு தெரிஞ்சா அவங்க யாராச்சும் கூட்டி வாங்க .. " என சொல்லி தொடர்பை துண்டித்தார் ..

    மெல்ல என்னை பதட்டம் கவ்வியது .. அவர் வீடு இருக்கும் இடம் தெரியாது .. நாங்கள் பாபா கோவிலில் பழக்கம் ஆனவர்கள் . கோவில் பார்த்து பழகுவதோடு சரி.. கை லேசாக நடுங்கியது . கொஞ்ச நேரம் முன்பு பாபா கோவிலில் இருந்து போன் செய்தவர் இப்போ அடி பட்டு கிடக்கிறார் .. சரி என எங்கள் பொதுவான நன்பர்கள் 5 பேருக்கு தகவல் சொல்லி அவர்களையும் ஜீ.ஹெச் வரச்சொல்லி கிளம்பினேன்..

    வழி நெடுக நான் நானாக இல்லை.. ஜீ.ஹெச் சென்றதும் அங்கே முன் வாசலில் இருந்த போலிஸ்காரர் இடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன் .. அவர் எங்கே என பதட்டமாக கேட்டேன், இடதுப்பக்கம் போகச்சொல்லி கை காட்டினார் .. அங்கே ஒரு நர்ஸ் தவிற யாரும் இல்லை நடு ஹாலில் ஒரு ஸ்டெக்சர் மட்டும் அதன் மேல் ஆதி அண்ணா படுத்து இருந்தார் .. மெல்ல நடந்து அருகில் போனேன் மேலே பார்த்த படி இருந்தார் . அண்ணா என கூப்பிட்டேன்.. பதிலும் இல்லை சலனமும் இல்லை .. அப்போது தான் பார்த்தேன் அந்த ஸ்டெச்சர் முழுக்க ரத்தம் ,,

    பகீர் என ஆனாது ..என் குரல் கம்மியது . தொண்டை குழியில் இருந்து பேச்சும் வரவில்லை .. மெல்ல அவரின் தலைப்பக்கம் பார்த்தேன்.. தர்பூசணி பழத்தை முழுதாக வெட்டாமல் அதன் ஒரு பாகத்தை மட்டும் வெட்டி வைத்து இருப்பார்கள் அதை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா ? அதை போல் அவர் தலையில் ஒரு பகுதி மட்டும் வெட்டி குதறி இருந்தது .. மூளையில் ஒரு பகுதியை காணோம் .. கைகளில் சிராய்ப்பு .. காலில் கொஞ்சம் காயம் ..அவ்ளோ தான் . கண்கள் மேலே வெறித்தபடி இருக்க உயிர் இல்லாமல் சடலமாக ஆதி அண்ணா..

    என் உடம்பு சில்லிட்டுப்போனது .. கால்கள் நடுங்கின.நிற்கவும் முடியவில்லை .. அந்த இடத்தை விட்டு நகரவும் முடியவில்லை.. மெல்ல சக நன்பர்கள் வர அனைவரும் அந்த கோரத்தை பார்த்து ஏதும் சொல்ல இயலாமல் அழக்கூடத்தோன்றாமல் ஸ்தம்பித்து நின்றோம்.

    அதற்க்குள் அந்த இண்ஸ்பெக்டர் அவரின் வீட்டு நெம்பர் கண்டு பிடித்து அவர்களுக்கும் தகவல் சொல்ல அவரின் ஒரே மகளும் மனைவியும் வர..நாங்கள் நகர்ந்து விபத்து பற்றியகாரணம் கேட்டோம்.. அவர் மிக மெதுவாகத்தான் வண்டி ஓட்டுவார்,, ( 20 கிலோ மீட்டர் வேகம் தாண்ட மாட்டார் .. ) .. செண்டர் மீடியன் மீது அவர் வண்டி மோதி கீழே விழுந்து .. அதில் இருந்த பழைய இரும்பு ராடு அவர் தலையை பதம் பார்த்ததாக சொன்னார் ..

    நாங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தோம் .. (ஜீ.எச் இல் இருந்து 200 மீட்டர் தூரத்தில் தான் விபத்து நடந்தது ..சேலம் மாநகராட்சி கட்டடம் எதிரில் ) ஆம் அந்த இடம் முழுக்க ரத்தம் .. சுற்றிலும் சிதறி இருந்தன அவர் மகளுக்காக அவர் வாங்கிய பழங்கள் .மற்றும் அவரின் செருப்பும்.. அவரின் M- 80 GHல் இருந்தது ..

    மீண்டும் G.H போனோம். அங்கே அவர் மகளில் சித்த பிரமை பிடித்தார் போல் இருந்தாள்.. அவளால் அதை கொஞ்சமும் நம்ப முடிய வில்லை.. அவர் மனைவி என் கையை பிடித்து " கடைசியாக அவர் என்ன சொன்னார் என திருப்பி திருப்பி கேட்டது .இன்னும் என் காதில் கேட்கிறது.. (நான் தான் முதலில் வந்ததால் அவர் என்னிடம் ஏதேனும் சொல்லி இருப்பார் என்பது அவர் யூகம். ) நான் எப்படி சொல்லமுடியும் நான் பார்த்த போதே அவர் உயிர் இல்லை என்றும் ஸ்பாட் அவுட் எனவும்..

    மற்ற பார்மாலிட்டிஸ் முடிந்த பிறகு அன்று ஞாயிறு என்பதால் பலர் விடுமுறை போலும் பிணவறைக்கு தள்ளிச்சொல்ல கூட ஆள் இல்லை . வண்டி தள்ள நான் கூடப்போனேன் . வெகுதூரம் சென்ற பின் வந்தது பிணவரை.. என்னுடன் பேசி பழகி சிரித்து திட்டி புத்தி சொன்ன நன்பர் பிணமாக ..மிக கணமாக.. நானும் அந்த ஊழியரும் தூக்கி போட்டோம் அவரை பிண குவியல்களில் அதன் பின் அவர் உடலை நேர் செய்தேன்.. அப்போது தான் என் கண்ணில் இருந்து முதல் துளி நீர் வந்தது . பிணவறை காப்பாளர் வழக்கம் போல் தலை சொறிய காந்தி சிரித்தார்,,

    அப்போது அந்த ஊழியர் சொன்னார் "தம்பி நாளைக்கு காலையிஏ 10 மணிக்கு வாங்க போதும் .. இவர் பேர் எல்லாம் சொல்லத்தேவை இல்லை .. என சொல்லிய படி அவர் கால் கட்டை விரலில் 32 எண் டோக்கன் கட்டிய படி சொன்னார் .. டேக்கன் நெம்பர் 32 ன்னு சொன்ன போதும் என " என்னுள் மிச்சம் மீதி இருந்த.. கர்வம் , ஆணவம் . அகந்தை எல்லாம் அழிந்தது அப்போது .. அப்போ செத்தா பேரு கூட சொந்தம் இல்லையா? டேக்கன் நெம்பர் தான் மிச்சுமா ? அது கூட ஜீ.எச் இல் இருந்து வெளிவரும் வரை தான் அப்பறம் ..... " பொணம் தான் .. சவம் தான் .. உயிர் இல்லாத ஜடம் தான் ..

    .. ஹெட்மெட் அணிவது உங்கள் விருப்பம் . நான் சொல்லி கேட்ட வேண்டும் என நான் நினைக்கவில்லை .. இது அறிவுரையும் அல்ல . நான் ஹெல்மெட் அணிய ஆரம்பித்த கதை அவ்ளோ தான் ****************************************************

    பின் குறிப்பு :- இதற்க்கு நீங்கள் லைக் போட வேண்டும் என கட்டாயம் ஏதும் இல்லை . இதை ஷேர் செய்து விழிப்புணச்சி செய்யவேண்டும் எனவும் நான் கேட்கவில்லை .. என் ஆசை ஒன்று தான் ....அன்று ஆதி அண்ணா பிணமாக இருந்த போது அவர் மனைவி என் கை பிடித்து கெஞ்சுக்கேட்டாரே.. " அவர் கடைசியா என்ன சொன்னார் ? " என ..... அது போல் மற்றும் ஒரு முறை நான் இனி கேட்கவே கூடாது என்பது மட்டும் தான்
Working...
X