பிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் , வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம் - வெண்கடுகு

சாம்பராணி தூபம் அல்லது அதிசய கம்ப்யூட்டர் சம்பராணி - ல தூபம் போடும் பொது கொஞ்சமா வெண்கடுக அதற்குள்ள போட்ட போதும் ( வேற ஏதும் செய்ய வேண்டாம் ) வாசனை வெண்கடுக போட்டதுக்கப்பறம் வேற மாதிரி வரும் , அந்த புகையை வீட்டில் உள்ள எல்லா இடங்களுக்கும் பரவும் படி செய்தால் போதும் . வெண்கடுகு நாட்டு மருந்து கடைல கிடைக்கும்

இதை தொடர்ந்து 3 மாதத்திற்கு அல்லது நம்ம பிரச்னை தீரும் வரை நம்பிகையுடன் ( நம்பிக்கை இல்லாமல் செய்து வந்தாலும் ) செய்து வந்தால் போதும் குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் ,( குடும்பத்தில் எப்ப பார்த்தாலும் ஒருதருகொருத்தர் சத்தம் போட்டுகிட்டு , சண்டை அடிச்கிட்டு , ஒருத்தர ஒருத்தர் திட்டி கிட்டு , தேவையே இல்லாம சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் சண்டை அடிச்கிட்டு இருக்கிற சூழ்நிலை அப்படியே தலை கீழாக மாறும் .

இது 100 சதவீதம் எனக்கு ஏற்பட்ட அனுபவ உண்மைசாய் பாபா உபாசகர் (என் குருநாதர் ) என்னை செய்ய சொன்ன பரிகாரம் இது :

ஆரம்பத்துல எனக்கு பெருசா நம்பிக்கை இல்லை , ஆனாலும் சொல்லிட்டாரே- னு 3 மாசம் சிரமம் பார்க்காம காலைலயும் , சாயந்தரமும் சும்மா 2 நிமிசம் மெனக்கெட்டு செய்தேன், இதுக்குன்னு பெருசா பக்தியோ , பூஜையோ எதுவுமே பன்னால , எப்பவும் போல சாமி கும்பிடரப்ப செஞ்சேன் அவ்வளவுதான் .ஆனா 3 மாசத்துல அப்படியே எல்லாம் தலை கீழா மாறிடிச்சு ,ஒருத்தருகொருத்தர் அன்பா , ஆதரவா , மாறிட்டோம்

இது எப்படி சாத்தியம் னு குழம்பி தான் போனேன்


வெண்கடுகு - ல அப்படி என்ன இருக்கு ? அந்த புகை மனோ ரீதியாகவும் , உடல் ரீதியாகவும் என்ன மாற்றத்த உண்டு பண்ணுது ? அப்படிங்கற அறிவியல் ஆராய்ச்சிக்குள்ள போக நான் விரும்பலை .ஆன்மிக ரீதியா ஏதோ ஒரு உண்மை
கண்டிப்பா இருக்கு .


ஆனா மிக பெரிய அளவில நன்மை ஏற்பட்டிருக்கு -கறது மட்டும் பட்டவர்த்தனமான, மறுக்க முடியாத உண்மை .


வீட்டில் உள்ள தீய சக்தி எப்படி வெளியேறும் - னு விளக்கம் கொடுத்தார் .


வெண்கடுகோடா புகை சுட்சமமா வீட்டுக்குள்ள இருக்கற தீய சக்தியோட ( ஏவல், பில்லி சூனியம் , செய்வினை ,குட்டி சாத்தன்,பேய் ,பிசாசு )
கண்ணுல பட்ட அதால அந்த கண் எரிச்சலை தாங்கவே முடியாதாம் , அதுக்கு (தீய சக்தி களுக்கு) ரொம்ப நேரத்துக்கு கண்ணு தெரியாம போயிடுமாம் , உடனே அந்த வீட்ட விட்டு வெளியே ஓடி போய்டும் ,யாரை பாலோ பண்றது-னு தெரியாம குழம்பி போய்டும் , எந்த வீட்டுல புகை அது கண்ணுல பட்டதோ திரும்ப அந்த வீட்டுக்குள்ள நுழையவே தயங்கும்,பயப்படும்


செய்து பாருங்கள் , நிச்சயம் 100 சதவிதம் அமைதியும் , நிம்மதியும் வீட்டுல கிடைக்கும் , பிரிந்து சிதறிய குடும்பம் ஒன்று சேரும் . இது சத்தியமான உண்மை .


http://copiedpost.blogspot.in/2012/06/blog-post_16.html

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends