Announcement

Collapse
No announcement yet.

சர்க்கரை நோயாளிகளுக்கு விடிவு 3 மாதத்துக

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சர்க்கரை நோயாளிகளுக்கு விடிவு 3 மாதத்துக

    சர்க்கரை நோயாளிகளுக்கு விடிவு 3 மாதத்துக்கு ஒரு ஊசி போதும்.

    சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க இனி தினமும் ஊசி போட்டு கொள்ள தேவையிருக்காது. ஒருமுறை போட்டுக் கொண்டால் 3 மாதங்கள் வரை செயல்படும் ஊசியை மத்திய அரசின் தேசிய நோய்தடுப்பு நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கோடிக்கணக்கான சர்க்கரை நோயாளிகளின் தினசரி கஷ்டத்தில் இருந்து இதன்மூலம் விடுதலை கிடைக்கும். ரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால், குளுக்கோஸ் அதிகரித்து சர்க்கரை நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இன்சுலின் அளவை பராமரிக்க தினமும் ஊசி போட்டுக் கொள்வது வழக்கம்.இதற்கு விடிவு வராதா என ஏங்குவோர் அதிகம். அவர்களுக்கு விடுதலை அளிக்க புதிய கண்டுபிடிப்பு வந்துள்ளது. இதுபற்றி தேசிய நோய்தடுப்பு நிறுவன ஆராய்ச்சி குழு தலைவர் அவ்தேஷ் சுரோலியா கூறியதாவது:

    எஸ்ஐஏ&2 (சுப்ராமோல்க்யூலர் இன்சுலின் அசெம்ப்ளி &2) என்ற ரசாயனத்தை ஹார்மோன் வடிவில் எலிகளுக்கு ஊசியாக போட்டு பரிசோதனை நடத்தினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. எஸ்ஐஏ&2 ஊசி போட்ட எலிகளின் உடலில் இன்சுலின் அளவு பல மாதங்களுக்கு மாறாமல் நீடித்தது. இது மனிதர்களுக்கும் பொருந்தும். இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதற்கு முன், எஸ்ஐஏ&2 ஹார்மோன் ஊசியை சர்க்கரை நோயாளி போட்டுக் கொள்ள வேண்டும்.

    மருந்துக்கு முன்னதாக உடலில் செல்லும் இந்த ஹார்மோன் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்காமல் ஒரு மாதம் வரை இருக்கும். அதிகபட்சமாக 120 நாட்கள் (4 மாதங்கள்) வரை சர்க்கரை நோயாளிகள் தினசரி இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதில் இருந்து இது விடுதலை அளிக்கும்.இப்போது தினசரி அல்லது 2 நாளுக்கு ஒருமுறை இன்சுலின் ஊசி போட்டாலும், சாப்பிட்ட பிறகு இன்சுலின் அளவு குறைந்து மயக்கம் உட்பட பல பாதிப்புகளை நோயாளிகள் சந்திக்கின்றனர். இந்த வேதனையை எஸ்ஐஏ &2 மாற்றும் என்றார்.உலகம் முழுவதும் இப்போது 20 கோடி சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். சர்க்கரை நோயின் தலைநகராக விளங்கும் இந்தியாவில் 5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


    Source:http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=585&cat=500
Working...
X