அவலில் சிறிது தண்ணீர் தெளித்து நனைத்து அதில் சிறிளவு மினகுத்தூள் சேர்த்து, தேங்காய் துருவலையும் சேர்த்து வேக வைத்தால் கார உணவு தயார்.


அவலை நனைத்து அதில் தேங்காய் பூ, சர்க்கரை, ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை சேர்த்து வேக வைத்தால் இனிப்பு உணவு தயார்.


அவலை நொறுக்கி தண்ணீரில் கலந்து, சர்க்கரை, தேங்காய்ப்பால், முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து அவல் பாயசம் செய்யலாம்.


அவலை நொறுக்கி, தயிர், வெங்காயம், மல்லி இலை, சிறிது இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்ச் சேர்த்து வேக வைத்தால் தயிர்ச் சாதம் தயார்.


கேரட்டைத் துருவி, அதில், மிளகாய், சீரகத்தூள், வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சேர்த்தால் கேரட் பொரியல் ரெடி.


பச்சைப்பூசணி (அ)கேரட்டை பொடிதாக்கி அதில் தயிர், சீரகத்தூள், வெங்காயம், மல்லி, கறிவேப்பிலை சேர்த்தால் பச்சாடி தயார் ஆகிவிடும்.


கேரட், சௌசௌ, தடியங்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை அரிந்து சேர்த்து வைத்துக் கொண்டு பச்சை மிளகாய், தேங்காய், கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை அரைத்து தயிரும் சேர்த்துக் கிளறினால் அவியல் ரெடி..


http://dinamani.com/health/article1343526.ece

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends