பழங்களின் ராணி என்றழைக்கப்படும் திராட்சை
பழங்களின் ராணி என்றழைக்கப்படும் திராட்சை, மூன்று நிறங்களில் காணப்படுகிறது. சிவப்பு, பச்சை, கறுப்பு, என நாட்டிற்கு ஏற்றவாறு நிறங்கள் மாறுபடுகின்றன.

இந்த பழத்தில் வைட்டமீன் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன. இதன் நிறம் கண்களை கவரும் வகையிலும், சாப்பிடுவதற்கு விரும்பதக்கதாகவும் இருக்கின்றது.


திராட்சை பழத்தில் இருந்து மருந்து, ஒயின், கிரேப் சீட் எண்ணெய், சாக்லேட், ஜூஸ் என பலவற்றை தயாரிக்கலாம். உடலுக்கு தேவையான தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமீன் போன்ற சத்துக்களை உடலுக்கு வழங்கி ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.


இப்பழத்தை உண்பதால்.....* உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும்.


* பித்தத்தால் ஏற்படும் வாந்தி, தலைச்சுற்றல், ஒற்றை தலைவலி ஆகிய பிரச்னைகளுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்.


* திராட்சைப் பழத்துடன் மிளகை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர, நாக்கு வறட்டுதல் நீங்கும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
* உடல் அசதி, பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கு திராட்சைப் பழம் ஏற்றது.


* திராட்சை சாறுடன் சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர மாதவிடை கோளாறுகள் சரியாகும். வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறுவதற்கு சிறந்த மருந்தாகும்.


* கண்பார்வையை அதிகரிக்கிறது. உடலில் தேவையில்லாத கொழுப்புகளை நீக்கவும், சிறுநீரக பிரச்னையை அகற்றவும் இது பயன்படுகிறது.


* இளம் பெண்களுக்கு ஏற்படும் முகப்பரு பிரச்னைக்கு, இதன் சாறு எடுத்து தடவினால் விரைவில் பரு கொட்டிவிடும். முகத்தில் ஏற்படும் கருவளையத்தை போக்கவும், தோல் வியாதியை கட்டுப்படுத்தவும் திரட்சை பயன்படுகிறது.


திரட்சைப்பழம் உடல் நலத்திற்கு மிக மிக நல்லது. ஆகவே தினமும் இதை உண்டு வந்தால் இளமையாகவும், அழகாகவும் இருக்கலாம்.