பிராயச்சித்தம்

பிரம்மாவை நிந்தித்தால் விஷ்ணுவிடம் சென்று பிராயச்சித்தம் பெறலாம். விஷ்ணுவை வசைபாடினால் சிவபெருமானிடம் சென்று மன்னிப்புக் கோரலாம். அந்தச் சிவனையே திட்டி விட்டால் கூட உத்தம சற்குரு அதற்கும் பிராயச் சித்தம் தருவார்.

ஆனால், சற்குரு ஒருவரை நிந்தனை செய்தால் ஈரேழு உலகிலும் பிராயச் சித்தம் பெறவே முடியாது. அந்த உத்தம குருவே மனம் வைத்தால்தான் பிராயச் சித்தம் தர முடியும். அறியாமை காரணமாக குரு வார்த்தையை மீறியதற்கு (குருவை நிந்தித்தவர்கள் அல்ல) பிராய சித்தம் தருவதே திருச்சி உய்யக் கொண்டான் மலை ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் ஆலய தீர்த்தமாகும்.

ஆவுடைமேல் முருகன் அற்புதக் காட்சி தரும் திருத்தலமே திருச்சி உய்யக்கொண்டான் ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் ஆலயமாகும். குழந்தைகள், பெரியவர்கள் தொலைந்து போனால் அவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்க ஆவுடை முருகன் அருள்புரிவார். செவ்வாய்க் கிழமைகளில் அரளிப் பூ மாலை ஆறு முழத்திற்குக் குறையாமல் சார்த்தி முருகனை வழிபடுதல் சிறப்பு. ஞாயிற்றுக் கிழமை அன்று தேன் கலந்த தினைமாவு முருகனுக்குப் படைத்து குழந்தைகளுக்குத் தானமாக வழங்குவதால் அப்பா பையன்களுக்கு இடையே உள்ள கருத்து வேற்றுமை மறையும். பெண் பிள்ளைகள் மட்டுமே உள்ள குடும்பங்களில் புது வாழ்வு மலரும்.

பெருமாள் ஆலயங்களில் துவார பாலகராக அருள்புரியும் தெய்வமே ஸ்ரீவிஷ்வக்சேனர் என்றழைக்கப்படும் சேனை முதலியார் ஆவார். திருமகளைக் கொடியில் ஏந்திய இவரைத் தரிசித்து பெருமாள் பிரசாதமான துளசித் தீர்த்தத்தை அருந்தி வந்தால் விந்து குற்றங்கள் நீங்கும்.அறிந்தும் அறியாமலும் சில நேரங்களில் பிறர் மீது வீண் பழி சுமத்துவதற்கு நாம் காரணமாகி விடுகிறோம். பின்பு அதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யலாம் என்ற வருத்தம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு மகான் ஒருவர் எளிய வழி ஒன்றைக் கூறுகிறார்... தலைசிறந்த மகான் ஒருவரிடம் வந்த ஒருவன், சுவாமி! நான் ஒருவர் மீது வீணாக பழி சுமத்திவிட்டேன். என் மனசாட்சி இப்போது உறுத்துகிறது. நான் செய்த தவறுக்கு ஏதாவது பிராயச்சித்தம் இருந்தால் கூறுங்கள் சுவாமி என்று கூறினான். அவனையே சிறிது நிமிடங்கள் உற்றுப் பார்த்த சுவாமி, ஒரு காகிதத்தை எடுத்து பல துண்டுகளாக கிழித்தார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஅதை அவனிடம் கொடுத்து, நாளை காலை இது ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரது வீட்டு வாசலிலும் வைத்து விட்டு வா என்று கூறினார். அவ்வாறே செய்து விட்டு வந்தவன், இப்போது என் பாவம் தொலைந்திருக்கும் அல்லவா? என்று வினவினான். சிறிது நேரம் கழித்து, நீ இன்னொரு வேலை செய்! ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைத்த காகித துண்டுகளை மீண்டும் எடுத்து வா என்று கூறினார்.

இதைக் கேட்டு திகைத்த அவன், என்ன சுவாமி கூறுகிறீர்கள் காற்றில் அவையெல்லாம் பறந்து போயிருக்குமே என்றான். மகனே! இப்படித்தான் ஒருவர் மீது சுமத்திய பழியும்; காகிதத்துண்டு போல் உன் வாயிலிருந்து வந்த வார்த்தையும் திரும்ப வராது. அதற்காக கவலைப்படாதே! நீ மனப்பூர்வமாக வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேள். அவர் எல்லையற்ற கருணை கொண்டவர். நீ செய்த பாவத்தையும் அவர் பறந்தோடச் செய்வார். எனவே செய்த தவறுக்கு மனப்பூர்வமாக வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
Sources:http://www.dinakaran.com/Aanmeegam

indusladies.com.