நீங்கள் கல்யாணத்துக்கோ, பிற சுபநிகழ்ச்சிகளுக்கோ செல்கிறீர்கள். வரும்போது, தாம்பூலப் பை கொடுப்பார்கள். இவ்வாறு தருவதற்கு "மங்கலம்' என்ற ஆன்மிக காரணம் மட்டுமல்ல, அறிவியல் காரணமும் ஒளிந்துள்ளது. தாம்பூலப்பையில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைப்பதுண்டு. இந்தப்பையில் எதை வைக்கிறோமோ இல்லையோ.. வெற்றிலை, பாக்கு அவசியம் இருக்க வேண்டும். இது லட்சுமியின் அம்சம். அதனால், ஒருவர் வெற்றிலையைக் கொடுக்கும் போது, மற்றவர் மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும்.

அறிவியல் ரீதியாக வெற்றிலை ஆரோக்கியத்திற்கும் துணைநிற்கிறது. திருமண வீட்டில் விருந்து சாப்பாடு என்பதால், வயிறு உணவைச் செரிக்க சிரமப்படும். வெற்றிலைச் சாறு ஜீரணசக்தியை அதிகப்படுத்தி செரிக்க உதவுகிறது. நாக்கில் ஏற்படும் சுவையற்ற தன்மையைப் போக்கும் தன்மையும் இதற்குண்டு. வெற்றிலையை தனியாக சாப்பிட்டால் ரத்தஓட்டம் பாதிக்கும். பாக்கை தனியாக சாப்பிட்டால் ரத்தசோகை உண்டாகும். அதனால், வெற்றிலையை பாக்குடன் சேர்த்து உண்பதே முறையானது. வெற்றிலையில் கண்ணுக்குத் தெரியாமல் பூச்சி, புழு தங்கியிருக்கும். அதனால், நன்கு சுத்தம் செய்து, அதன் நுனி, நரம்புகளைக் கிள்ளி விட்டு சாப்பிட வேண்டும் என்பதும் கட்டாயம்.


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends


ஆன்மிக கட்டுரை