நடமாடும் தெய்வமென உலக மக்களால் போற்றப்படும் காஞ்சி மகாபெரியவர் தனது சிறுவயதில், பெற்றோருடன் திண்டிவனத்தில் தங்கியிருந்தார். அவரது அன்றையப் பெயர் "சுவாமிநாதன்'. தந்தை சுப்பிரமணிய சாஸ்திரிகள், தாயார் மகாலட்சுமி.
சுவாமிகள், திண்டிவனத்திலுள்ள அமெரிக்க மிஷனரி பள்ளியில் படித்து வந்தார். அவர் பள்ளிக்குச் செல்லும் போதும், திரும்பும்போதும், தெரு முனையில் பட்சணம் விற்கும் ஒரு பிராமண மூதாட்டியிடம் அவற்றை வாங்கி உண்பார். சில நேரம் காசு கொடுப்பார். சில சமயங்களில், பிறகு தருவதாக சொல்லி விடுவார். ஒருமுறை, பட்சணம் சாப்பிட்ட போது காசு கொடுக்கவில்லை. பாட்டி கேட்டதற்கு, "அப்பா தருவார்' என்றார். உடனே பாட்டி, "இன்று உனக்கு பட்சணம் தரமாட்டேன், போ' என சொல்லிவிட்டார்.
பெரியவர் அந்த மூதாட்டியிடம்,""பாட்டி! இப்போது நீங்கள் எனக்கு பட்சணம் இல்லை என சொல்லி விட்டீர்கள். இதே பட்சணங்களை தட்டு நிறைய வைத்துக்கொண்டு, நீங்கள் எனக்காக காத்துக்கிடக்கும் நாள் வரும்,'' என்று சிரித்துக்கொண்டே சொல்லி விட்டு போய்விட்டார்.
இந்த சம்பவத்துக்குப் பின் பல காலம் கடந்து விட்டது. காஞ்சி மடத்தின் பீடாதிபதியான பிறகு சுவாமிகள் திண்டிவனம் சென்றார். தான் படித்த பள்ளி வழியாக தாங்கள் வசித்த வீட்டிற்கு சென்றார். வழியில், பட்சணப்பாட்டியும் தட்டு நிறைய பலகாரங்களுடன் சென்று சுவாமியை நமஸ்கரித்தார். பரவசத்தில் கண்ணீர் பொங்கியது.
சுவாமி பாட்டியை ஆசிர்வதித்து பட்சணத் தட்டைப் பெற்று சீடர்களிடம் ஒப்படைத்தார். பெரியவரின் சொல்படி அவரைத் தேடி வந்த பாட்டியும், பட்சணத்தட்டும் பாக்கியம் செய்தவர்கள் தானோ!

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள்