கட்டைவிரலை உறிஞ்சும் பழக்கம்

Click image for larger version. 

Name:	Kattai Viral.jpg 
Views:	3 
Size:	23.7 KB 
ID:	1519கட்டைவிரலை உறிஞ்சும் பழக்கம் கொண்ட குழந்தைகளுக்கு மனதில் ஒரு வித பயம், தனிமையில் இருக்கிறோம் என்கின்ற செயல்பாடுகளின் காரணமாகவே குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுகின்றனர். அதிகமான இளம் குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவதால் பசி உணர்விலிருந்து விடுபடுவதற்கான வழியாக கருதுகின்றனர்..

கட்டை விரலை உறிஞ்சும் அதிக குழந்தைகள் உணவில் கவனம் செலுத்துவதில்லை.. இதனால் குழந்தைகளுக்கு எடை குறைவாகவே உள்ளது.. இது குழந்தைகளுக்கான ஒரு ஆறுதல் நடவடிக்கை மட்டுமே. இதை குழந்தைகள் வழக்கமாக கடைபிடிக்க அனுமதிக்ககூடாது.. குழந்தைகளின் விரல் உறிஞ்சும் பழக்கதால் பெற்றோர்கள் எப்படி நிறுத்துவது என கவலை படுகின்றனர்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsநான்கு வயது வரை குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவது பிரச்சனையில்லை அதற்கு மேல் குழந்தைகள் விரல் உறிஞ்சினால் பற்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். நான்கு மற்றும் ஐந்து வயதிலிருந்து கட்டை விரலை உறிஞ்சும் பழக்கம் தொடர்ந்தால் பற்களில் வெடிப்பு ஏற்பட்டு அதுவே தீவிர பிரச்சனையாக மாறும்.

குறிப்பிட்ட வயதிற்கு மேலாகியும் இந்த பிரச்சனை தொடர்வதால் பற்கள் நெருக்கமாக மற்றும் வளைந்து ஏதேனும் பொருட்களை கடிப்பதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். குழந்தைகள் பேசுவதில் பிரச்சனை உருவாகலாம். அல்லது ஏதேனும் விழுங்குவதிலும் பிரச்சனை ஏற்படக்கூடலாம்.
முன் பற்கள் புடைப்பு மற்றும் இடப்பெயர்ச்சி ஏற்படும்.

பற்களின் வடிவக்கேடு குழந்தையின் முகதோற்றம் பாதிக்கும். மேலும் உணர்ச்சிகரமான சிக்கல்களை ஏற்படுத்தும். பெரும்பாலான குழந்தைகளின் இந்த நடவடிக்கை தங்கள் புகுமுக பள்ளி ஆண்டுகளில் இது ஒப்பீட்டளவில் பாதிப்பை விளைவிக்காது. குழந்தைகள் வாயில் கட்டை விரலை வைக்கும் போது கிருமிகள் வாய்வழியாக வயிற்றுக்குள் நுழைந்து விடும் என்பதை அவர்களுக்கு தெரிவியுங்கள்.

உங்கள் குழந்தைகள் கட்டை விரலை சப்பும் பழக்கத்தை விடவில்லை எனில் உங்கள் குழந்தையின் மீது கூடுதல் கவனம் செலுத்தி கவனிக்க வேண்டும். ஆரோக்கியமாக குழந்தைகள் இருக்க மன அழுத்தம் ஏதேனும் இருப்பின் அதை சரிசெய்ய வேண்டும். மேலும் உங்கள் குழந்தையின் குறிக்கோள்களை முன்னேற்றங்களை பாராட்டுங்கள் அவர்களுக்கு ஏதேனும் வெகுமதி அளித்து பாராட்டு தெரிவிப்பின் குழந்தையின் மனநிலை மாறுபடும்.

மருத்துவரிடம் சென்று பல்லுக்கு கிளிப் ஒன்று வாங்கி மருத்துவரின் ஆலோசனையுடன் மாட்டிவிடுங்கள்.Source: Dinakaran