பேச்சுக் குறைபாட்டுக்குத் தீர்வு காண்பது


பேச்சுக் குறைபாட்டுக்குத் தீர்வு காண்பது குறித்து பேச்சுத்திறன் வல்லுனர் பிரமிளா கூறுகிறார்..இரண்டு முதல் மூன்று வயது வரை குழந்தைகளின்
பேச்சுத்திறன் படிப்படியாக மேம்படும். அழுகை, குழந்தைகளின் முதல் மொழி. ங்காவில் தொடங்கி ப்பா, ம்மா, த்தை என தத்தித் தத்தி ஒரு
வயதில் ஒற்றை வார்த்தைகளுக்குத் தாவும். இரண்டு வயதில் அர்த்தம் உள்ள இரண்டு வார்த்தைகளை அமைத்து தனக்குப் பிடித்தது போலப் பேசும்.
குழந்தையின் பேச்சு என்பது காது கேட்கும் திறன், பேச்சுத்திறன் மற்றும் மொழித்திறன் ஆகிய மூன்றின் தொடர்ச்சியாகும். இவை மூன்றும்தான் குழந்தையின் பேச்சைத் தீர்மானிக்கின்றன.


குழந்தைகளுக்குப் பேச்சுப் பிரச்னை உண்டாக சத்துக் குறைவான உணவும் ஒரு காரணம். உணவில் போதுமான சத்து இல்லாத காரணத்தால், நரம்பில் கோளாறு ஏற்பட்டு பேச்சுத்திறன் குறைபாடு உண்டாகிறது. இதற்கு குளூட்டன் ப்ரீ டயட் தர வேண்டும். உணவு வகைகளை நன்றாக வேக வைத்துத் தர வேண்டும். பதப்படுத்தப்பட்ட அரிசியை சமையலுக்கு பயன்படுத்தலாம். முழு தானியங்களாக எதையும் தரக்கூடாது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஅவற்றையும் பதப்படுத்தப்பட்ட நிலையில் தரவேண்டும். 8 தினசரி உணவில் ஜின்க், விட்டமின் டி, ஈ சத்துக்குறைபாட்டின் காரணமாகவும் இப்பிரச்னை அதிகரிக்கும். மெக்னீசியம் பற்றாக்குறையின் காரணமாக குழந்தையின் மொத்த வளர்ச்சியுமே பாதிப்புக்கு உள்ளாகும். இச்சத்துகள் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

8 க்ளூட்டன் ப்ரீ டயட், பச்சைக்காய்கறிகள், முட்டை, பட்டாணி வகைகள், சாண்ட் விச், உருளைக்கிழங்கு, பிரவுன் ரைஸ் ஆகியவற்றை சேர்த்துக்கொள்வது அவசியம். 8 காலை உணவில் பதப்படுத்தப்பட்ட அரிசி சாதம் ஒரு கப், கொழுப்பு நீக்கிய பால் அல்லது வாழைப்பழம் ஒன்று கொடுக்கலாம்.

11 மணிக்கு பழங்கள், முந்திரிப்பருப்பு, கொட்டை வகைகள். க்ளூட்டன் ப்ரீ சாக்லெட் சாப்பிடத் தரலாம். பிரவுன் ரைஸ், பிரட் டோஸ்ட், ஆப்பிள் அல்லது ஆப்பிள் ஜூஸ் தரலாம். மதியம் பதப்படுத்தப்பட்ட அரிசி சாதத்துடன் வேகவைத்த முட்டை, பாலக் கீரை, வெள்ளரிக்காய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளில் ஏதாவது ஒன்று தரலாம். அசைவ உணவை நன்றாக வேக வைத்து மசித்த நிலையில் தர வேண்டும். இரவில் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவைக் கொடுக்கலாம்.Sourceinakaran