Announcement

Collapse
No announcement yet.

ஆஸ்துமா குழந்தைகளைக் கவனியுங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆஸ்துமா குழந்தைகளைக் கவனியுங்கள்

    ஆஸ்துமா குழந்தைகளைக் கவனியுங்கள்



    Click image for larger version

Name:	Ashma.jpg
Views:	1
Size:	37.3 KB
ID:	35428

    மழையும் குளிரும் மாறி மாறிக் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்க, மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம்! லேசான தூறலோ, சில டிகிரி அதிகமான குளிரோ கூட ஒப்புக்கொள்ளாது பலருக்கு. சாதாரண சளி, இருமலில் ஆரம்பிக்கும். அப்படியே தொண்டையில் ‘கீச்... கீச்’ சத்தமும் சேர்ந்து கொள்ளும். அடுத்த கட்டமாக சுவாசிப்பதில் சிக்கல் உண்டாகி, மூச்சுத்திணறல் உண்டாகும்.

    விசிலை விழுங்கியது போல, மூச்சு விடும் போதெல்லாம் விசில் சத்தம் சேர்ந்து ஒலிக்கும். தூக்கம் தொலையும். பசி மறக்கும். ‘எப்போ சரியாகும்’ என உடலும் மனதும் அழும். சுருக்கமாக சொல்லப் போனால், அந்த அனுபவம் நரக வேதனை... அதுதான் ஆஸ்துமா!

    குழந்தைகளுக்கு ஆஸ்துமா இருப்பதைப் பல பெற்றோரும் தாமதமாகவே கண்டு பிடிக்கிறார்கள். நோயின் தீவிரம் அதிகரிக்கும் போது, குழந்தையின் பேச்சுத் திறமை பாதிக்கலாம். அதாவது வாக்கியங்களாகப் பேசிக் கொண்டிருந்த குழந்தைகளின் பேச்சு, நோயின் பாதிப்பால், வார்த்தைகளாகக் குறையும். கோபமும் பதற்றமும் அதிகரித்து, ஒருவித எரிச்சல் மனநிலையிலேயே இருப்பார்கள்.

    சிகிச்சைக்கு வந்த குழந்தையிடம், ‘ஆஸ்துமா வரும் போது எப்படி ஃபீல் பண்றே’ எனக் கேட்டிருக்கிறார் மருத்துவர். வார்த்தைகளால் பதில் சொல்ல முடியாத அந்தக் குழந்தை, தன் அவஸ்தையை படமாக வரைந்து காட்டியதாம். அந்தப் படம் எப்படியிருந்தது தெரியுமா? அந்தக் குழந்தை படுத்திருக்க, அதன் நெஞ்சின் மேல் ஒரு யானை ஏறி உட்கார்ந்திருக்கிறது. அப்படியென்றால், அந்தக் குழந்தையின் வேதனையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.



    Sourceinakaran
Working...
X