குழந்தைகளுக்கு வியர்க்குரு வருதா


Click image for larger version. 

Name:	Verkuru.jpg 
Views:	2 
Size:	27.8 KB 
ID:	1524
வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு வரும் பொதுவான தொந்தரவு வியர்க்குரு. இதை ஆங்கிலத்தில் prickly heat என்றும் மருத்துவ வழக்கில் miliaria என்றும் அழைப்பர்.

பெரியவர்வளை விட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஏனெனில் குழந்தைகளின் வியர்வைச்சுரப்பிகளின் வளர்ச்சி குறைவாக இருப்பதால் வெயில் நேரங்களில் உடல்சூட்டைத்தணிக்க அதிகப்படியாக வியர்வையை வெளியேற்ற முயற்சி செய்து வீங்குகிறது.இது சிறுசிறு கொப்புளங்களை ஏற்படுத்தும்.இதனுள் சில பாக்டீரியங்கள் வளருவதால் சிவந்து காணப்படும் மேலும் வியர்வை வெளியேறாமல் உள்ளே அடைத்துக்கொள்வதால் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும்.

தவிர்க்கும் வழிகள் :

குழந்தைகளின் உடலில் அதிகப்படியான வியர்வைவராமல் பார்த்துக்கொண்டால் வியர்க்குருவை குறைக்கலாம். அதற்கு குழந்தைகளை தினமும் தவறாமல் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டவேண்டும். இரண்டுவேளை குளிப்பாட்டினால்கூட நல்லது. அப்படி முடியாவிட்டால் தண்ணீர் வைத்து துண்டுக்குளியல் செய்தால் கூட நல்லதுதான்.

சாதாரண டால்கம் பவுடரை அதிகம் உபயோகிக்ககூடாது ஏனெனில் அவைகள் வியர்வைசுரப்பிகளின் துளைகளை அடைத்துவிடுவதால் தொந்தரவு மேலும் அதிகரிக்கும். அதற்கு பதிலாக கேலமைன் உள்ள லோஷன்களை பயன்படுத்தலாம்.மேலும் மென்தால் உள்ள சிறப்பு பவுடர்களை பயன்படுத்தலாம்.

எப்போது மருத்துவரை அணுகுவது?

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஅதிக அளவில் ஏற்பட்டு எரிச்சல் அதிகரித்தாலோ அல்லது சீழ்ப்பிடித்து காய்ச்சல் வந்தாலோ மருத்துவரை உடன் உடன் அணுகவும்.குழந்தைகளின் உடலில் நீரிழப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதும் அவசியம்.


Source: Dinakaran